உலகக்கோப்பை ஜெயித்தால் தான் திருமணமா? ரஷீத் கான் கொடுத்த விளக்கம்
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ரஷீத்கான் உலகக்க்கோப்பை வென்ற பின்பு தான் திருமணம் என்று கூறியதாக, செய்தி வெளியான அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகக்கோப்பை டி20 தொடர் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதி பெற்ற அணிகளில் ஆப்கானிஸ்தானும் உள்ளது.
இந்நிலையில், தான் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரஷித் கான், தனது நாட்டுக்காக உலகக்கோப்பை வென்று கொடுத்தப்பின் தான் திருமணம் செய்வேன் என்று கூறியதாக ச்யெதி வெளியானது.
இது குறித்து ரஷீத்கான் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், இதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உண்மையை சொல்லவேண்டும் என்றால் உலகக்கோப்பையை வென்ற பின் தான் திருமணம் செய்துகொள்வேன் என்று நான் சொல்லவே இல்லை.
அடுத்த சில வருடங்கள் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளேன். குறிப்பாக 3 உலகக்கோப்பைகள் உள்ளது.
அதாவது தற்போதைய 2021 டி20 உலகக்கோப்பை, 2022 டி20 உலகக்கோப்பை மற்றும் 2023-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வரவுள்ளதால், அதில் கவனம் செலுத்தி வருகிறேன்.
இதன் காரணமாக இப்போதைக்கு திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை என்று கூறினேன். ஆனால் அது வெளியில் வேறுமாதிரி செய்தியாக வந்துவிட்டது என்று விளக்கம் அளித்துள்ளார்.