ரூ 25457 கோடியை கடனாகக் கேட்கும் முகேஷ் அம்பானி... இது இரண்டாவது முறை
ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி ரூ 25457 கோடி தொகையை கடனாகப் பெறும் பொருட்டு பல வங்கிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கிகளுடன் பேச்சுவார்த்தை
இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.17.39 லட்சம் கோடி. மிகப் பெரிய சந்தை மதிப்பு மற்றும் வணிக சாம்ராஜ்யமாக இருந்தபோதிலும், ரிலையன்ஸ் நிறுவனம் 3 பில்லியன் டொலர் கடனுக்காக வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இது 2023ம் ஆண்டிற்குப் பிறகு ஒரு இந்திய நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் இந்தியாவின் மிகப்பெரிய கடன் ஒப்பந்தமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. சுமார் 6 வங்கிகளுடன் ரிலையன்ஸ் பேச்சுவார்த்தை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
2025ல் முதல் காலாண்டில் கடன் தொகை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கைமாறப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கடனுக்கான விதிமுறைகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
3 பில்லியன் டொலர்
மேலும் கடன் விவகாரம் குறித்து நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. 2023ல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுமார் 8 பில்லியன் டொலர் தொகையை பல வங்கிகளிடம் இருந்தும் கடனாகப் பெற்றது.
அதுவே சாதனைத் தொகையாக பார்க்கப்பட்டது. அதன் பின்னர் தற்போது ரிலையன்ஸ் நிறுவனமே 3 பில்லியன் டொலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ 25457 கோடி தொகையை கடனாகப் பெற உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |