உலகின் மிகப்பாரிய எண்ணெய் இருப்பை கண்டுபிடித்த ரஷ்யா - புதிய உலகப் பேரழிவு தொடங்குமா?
உலக வரலாற்றிலேயே மிகப்பாரிய கச்சா எண்ணெய் களஞ்சியம் (Crude Oil Reserve) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - அதுவும் பிரிட்டிஷ் ஆண்டார்டிகா பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி தகவலை ரஷ்யாவின் அரசு புவியியல் நிறுவனம் Rosgeo வெளியிட்டது.
அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், Weddell Sea பகுதியில் சுமார் 511 பில்லியன் பேரல் எண்ணெய் புதைந்து கிடப்பதாக அறியப்பட்டுள்ளது.
இது இதுவரை பூமியில் தோண்டப்பட்ட எண்ணெய் அளவை விட அதிகம் என கூறப்படுகிறது.
Antarctic உடன்படிக்கையை மீறுகிறதா ரஷ்யா?
Antarctic Treaty 1959-இன் கீழ், அந்த பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகள் (எ.கா., இயற்கை வளங்களை தோண்டும் பணிகள்) நடத்தக் கூடாது. ஆனால் ரஷ்யா, “அறிவியல் ஆய்வு மட்டுமே” செய்ததாகக் கூறுகிறது.
இதற்கிடையே, சிலி மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளும் அந்த பிராந்தியத்தில் உரிமை கோருகின்றன. எனவே, இக்கண்டுபிடிப்பு புதிய உலக அரசியல் பதற்றங்களுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எதிர்கால சிக்கல்கள்
இயற்கை வளங்கள் மந்தமாகி வரும் சூழலில், இதுபோன்ற மிகப்பாரிய எண்ணெய் களஞ்சியம் உலகத்தையே ஈர்க்கும்.
முக்கிய உலக சக்திகள் இந்த எண்ணெய் வளத்திற்காக யுத்தம் செய்யக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
ரஷ்யா இந்தக் களஞ்சியத்தை தோண்டத் தொடங்கினால், அதில் சேர ஆர்வம் கொண்ட நாடுகள் வரிசையாக காத்திருக்கும்.
இக்கண்டுபிடிப்பு ரஷ்யாவிற்கு புதியலைப் போல் அமையலாம். ஆனால், இது புதிய உலக சிக்கல்கள் மற்றும் யுத்தங்களை உருவாக்கும் ஆரம்பப்புள்ளியாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia oil reserve Antarctica, Largest crude oil discovery 2025, Rosgeo oil find Weddell Sea, Russia Antarctic treaty violation, Russia black gold discovery, Global conflict over Antarctica oil, Antarctic Treaty oil ban, Crude oil under ice Russia, 511 billion barrels discovery, British Antarctic oil dispute