வாணவேடிக்கை காட்டிய சர்ஃப்ராஸ் கான்! 47 பந்துகளில் முதல் சதம்..சரித்த ஷர்துல் தாக்கூர்
சையத் முஷ்தாக் அலி கிண்ணத் தொடரில் சர்ஃப்ராஸ் கான் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
சர்ஃப்ராஸ் கான்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் டி20 போட்டியில் விளையாடும் சர்ஃப்ராஸ் கான் (Sarfaraz Khan), சையத் முஷ்தாக் அலி கிண்ணத் தொடரில் முதல் சதத்தை பதிவு செய்தார். 
அஸாம் அணிக்கு எதிரான போட்டியில் சர்ஃப்ராஸ் கான் 47 பந்துகளில் 100 ஓட்டங்கள் விளாசினார். இதில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.
சர்ஃப்ராஸ் கானின் அதிரடி மூலம் மும்பை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் குவித்தது.
A big SMAT hundred for Sarfaraz Khan 💯 pic.twitter.com/3pJRL086Fl
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 2, 2025
ஷர்துல் மிரட்டல்
பின்னர் ஆடிய அஸ்ஸாம் அணி 19.1 ஓவர்களில் 122 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக சிப்சங்கர் ராய் 41 (33) ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் மும்பை அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அணித்தலைவர் ஷர்துல் தாக்கூர் 5 விக்கெட்டுகளும், சைராஜ் மற்றும் அதர்வா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Shardul Thakur picked a five-wicket haul against Assam in the SMAT 2025 👏🖐#ShardulThakur #SMAT #Mumbai #CricketTwitter pic.twitter.com/h20QGONKgh
— InsideSport (@InsideSportIND) December 2, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |