சட்டுன்னு உடல் எடையை குறைக்க உதவும் சோள தோசை.., எப்படி செய்வது?
சோளத்தில் உடலுக்குத் தேவையான புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளன.
இதில் குறைந்த அளவே குளுக்கோஸ் உள்ளதால், உடல் எடையைக் குறைக்கவும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.
அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த சோளத்தில் தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெள்ளை சோளம்- 1 கப்
- உளுந்து- 1 கப்
- பச்சரிசி- ¼ கப்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- நெய்- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் வெள்ளை சோளம் சேர்த்து 2 முறை நன்கு கழுவி 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் ஒரு கிண்ணத்தில் உளுந்து, பச்சரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வெள்ளை சோளம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.

இதனைத்தொடர்ந்து மிக்ஸி ஜாரில் ஊறவைத்து உளுந்து, அரிசியை நன்கு மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அரைத்த மாவுகளை உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
இறுதியாக அடுப்பில் தவா வைத்து தோசை ஊற்றி நெய் சேர்த்து பொன்னிறமாக சுட்டு எடுத்தால் சத்தான சோள தோசை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |