புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை
உக்ரைன் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர, விளாடிமிர் புடினுக்கும் ட்ரம்புக்கும் இடையிலான நேரடி சந்திப்பு உதாவது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஒரு தீர்வை எட்ட
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும், ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் போர் முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பரப்புரைகளின் போது கூறி வந்தார்.

ஆனால், ஜனவரியில் பொறுப்புக்கு வந்த ட்ரம்பால், இதுவரை உக்ரைன் விவகாரத்தில் ஒரு தீர்வை எட்ட முடியாமல் போயுள்ளது. மட்டுமின்றி, தொடக்கத்தில் ரஷ்ய ஆதரவு நிலையில் உறுதியாக இருந்த ட்ரம்ப்,
உக்ரைன் ஜனாதிபதியை வெள்ளை மாளிகையில் வரவழைத்து நேரலையில் அவமானப்படுத்தி அனுப்பினார். அத்துடன் உக்ரைனுக்கான ஆயுத உதவிகளையும் நிறுத்தினார்.
ஏற்கனவே அளித்த ஏவுகணைகளை செயலிழக்க செய்தார். உக்ரைன் போருக்கு காரணமே உக்ரைன் மட்டுந்தான் என்றார். ரஷ்ய ஜனாதிபதி புடின் தமது நண்பர் என கூறிக் கொண்ட ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதிக்கு நெருக்கடி அளிக்கத் தொடங்கினார்.
வலுவான ரஷ்யாவை எதிர்கொள்ள வேண்டாம், சரணடைந்து விடுங்கள் என்றும் மிரட்டினார். ஆனால், அமெரிக்காவில் நடந்த புடின் - ட்ரம்ப் சந்திப்புக்கு பின்னர் நிலைமை மொத்தமாக மாறியது.

ரஷ்யாவிற்கு எதிராக ட்ரம்ப் எச்சரிக்கை செய்வதும் கெடு விதிப்பதும் அதிகரித்தது. ரஷ்ய தரப்பில் இருந்து ட்ரம்பை கண்டுகொள்ளவும் இல்லை. மட்டுமின்றி, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புடின் வைத்துள்ள நிபந்தனைகள் ட்ரம்பை இந்த முயற்சிகளைக் கைவிடத் தூண்டியது.
முதல் நடவடிக்கை இது
இந்த நிலையில், ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் பெரும் எண்ணை நிறுவனங்கள் இரண்டின் மீது அமெரிக்கா தடைகள் விதித்தது.
ஜனவரி மாதம் பொறுப்புக்கு வந்ததில் இருந்து ரஷ்யாவிற்கு எதிரான ட்ரம்பின் முதல் நடவடிக்கை இது. ஆனால், ரஷ்யா மீது தீவிர தாக்குதல் நடத்தும் உக்ரைனின் கோரிக்கையை ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.

இப்படியான சூழலில் ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளரான Dmitry Peskov வெளியிட்டுள்ள அறிக்கையில், ட்ரம்ப் - புடின் சந்திபால் பலனேதும் ஏற்படப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் தரவுகளின் அடிப்படையில் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |