பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
பிரித்தானியாவில் புயல் வீசத்துவங்கியுள்ள நிலையில், சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு மின் வழங்கல் அமைப்பு மக்களை அறிவுறுத்தியுள்ளது.
Bert புயல்
பிரித்தானியாவில், Bert என பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று மழையையும் காற்றையும் கொண்டுவந்துள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்நிலையில், மின்சாரம் மற்றும் எரிவாயு வழங்கல் அமைப்பான Direct Energy, சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்தியுள்ளது.
அவை எவையென்றால், பாண், சூப் முதலான டின்களில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள், கெட்டுப்போகாத குக்கீஸ் முதலான ஸ்நாக்ஸ் வகைகள், Cereal வகை உணவுகள் மற்றும் உலர்ந்த பாஸ்தா மற்றும் சாஸ் உணவுகள் ஆகியவை ஆகும்.
குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கான உணவு தண்ணீர், அத்தியாவசிய மருந்துகள், போர்வைகள், டார்ச் , பேட்டரிகள், சார்ஜர்கள் ஆகியவற்றையும் தயாராக வைத்துக்கொள்ளுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், மேற்கு மற்றும் வடக்கு இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்தின் பல இடங்களுக்கு, உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை காலை 4.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி வரை மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |