இலவச பஸ் பாஸ் திட்டம் ரத்து: ஏமாற்றமடைந்துள்ள பிரித்தானிய மக்கள்
பிரித்தானியாவில் சோதனை முயற்சியாக துவக்கப்பட்ட இலவச பஸ் பாஸ் திட்டம் ரத்து செய்யப்பட இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மக்களுக்கு ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.
இலவச பஸ் பாஸ் திட்டம் ரத்து?
பிரித்தானியாவில், 22 வயதுக்குக் கீழுள்ளவர்கள், குறிப்பாக தூர இடங்களில் வாழ்பவர்கள், கல்வி கற்கச் செல்வதற்கும், வேலைக்குச் செல்வதற்கும் உதவியாக இருக்கும் என்பதற்காக இலவச பஸ் பாஸ் திட்டம் ஒன்று துவக்கப்பட்டது.
மாதம் ஒன்றிற்கு 120 பவுண்டுகள் வரை பயணத்துக்காக செலவாகும் நிலையில் இலவச பஸ் பாஸ் திட்டம் தங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள் இளைஞர்கள், இளம்பெண்கள் பலர்.
ஆனால், நிதிப்பற்றாக்குறை காரணமாக அந்த இலவச பஸ் பாஸ் திட்டம் ரத்து செய்யப்பட இருப்பதாக லேபர் அரசு தற்போது தெரிவித்துள்ளது.
ஆகவே, மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதுடன், லட்சியம் இல்லாத அரசு என லேபர் அரசின்மீது விமர்சனமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |