ஆசையாய் குழந்தைகளை பார்க்க சென்ற கணவர்.,முன்னாள் மனைவி அரங்கேற்றிய கொடூரம்
அமெரிக்காவில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் முன்னாள் மனைவியால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்கலைக்கழக பேராசிரியர்
கலிபோர்னியா மாகாண பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றி வந்தவர் Przemyslaw Jeziorski.
43 வயதான இவர் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்த தம்பதி கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.
அதன் பின்னர் குழந்தைகள் இருவரும் தாயின் பராமரிப்பில் கிரீஸ் நாட்டில் வசித்து வந்ததால், அவர்களை காண Jeziorski அந்நாட்டிற்கு சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் உள்ள தனது முன்னாள் மனைவி வீட்டுக்கு குழந்தைகளை காண Jeziorski சென்றார்.
சம்பவ இடத்திலேயே
அங்கு அவர் துப்பாக்கியால் சுடப்பட்டதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது Jeziorskiயின் முன்னாள் மனைவி தனது காதலருடன் சேர்ந்து அவரை கொன்றது அம்பலமானது. இதனையடுத்து Jeziorskiயின் முன்னாள் மனைவி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |