ரஷ்ய நிறுவனம் மீதான தடைகளை நிறுத்திய அமெரிக்கா
ரஷ்ய எண்ணெய் நிறுவனமான லூகாயில் மீதான சில தடைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
தடைகள்
அமெரிக்க கருவூலத்துறையானது ரஷ்யாவிற்கு வெளியே உள்ள லூகாயில் பிராண்டட் எரிவாயு நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான அங்கீகாரத்தை நீட்டித்துள்ளது. 
மேலும், லூகாயில் மீதான சில தடைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள லூகாயில் பிராண்டட் எரிவாயு நிலையங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய அனுமதிக்கிறது.
சில்லறை சேவை நிலையங்களுடன் சாதாரண பரிவர்த்தனைகளில் ஈடுபட விரும்பும் நுகர்வோர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்கான இந்த அங்கீகாரத்தை நீட்டித்துள்ளதாக கருவூலம் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அக்டோபரில் முடிவு செய்த நடவடிக்கைகளை இந்த முடிவு ஓரளவு இடைநிறுத்துகிறது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |