ஐசிசி டி20 கிரிக்கெட் புதிய தரவரிசை பட்டியல்! மளமளவென 2வது இடத்துக்கு முன்னேறி கெத்து காட்டிய இலங்கை அணி வீரர்
ஐசிசி வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் வீரர்கள் தரவரிசை பட்டியலில் இலங்கை வீரர் வனிண்டு ஹசரங்கா டிசில்வா மளமளவென 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
ஐசிசி வெளியிட்டுள்ள டி20 சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் டெக்ரைஸ் ஷம்சி 792 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
இலங்கையின் வனிண்டு ஹசரங்கா டிசில்வா 720 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் முதல் முறையாக உச்சத்துக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார்.
இதன் மூலம் இரண்டாமிடத்தில் இருந்த ரசித்கான் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
நான்காம் இடத்தில் அடில் ரஷித்தும், 5ஆம் இடத்தில் முஜிப் உர் ரஹ்மானும் உள்ளனர்.
இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.