நெருங்கும் புலம்பெயர்தல் எதிர்ப்பு வாக்கெடுப்பு... தொடர்ந்து எச்சரிக்கும் எதிரணியினர்
சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தலுக்கு எதிரான பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பு நெருங்கும் நிலையில், மக்கள் அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டாம் என்று எதிரணியினர் தொடர்ந்து எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
நெருங்கும் புலம்பெயர்தல் எதிர்ப்பு வாக்கெடுப்பு
சுவிட்சர்லாந்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ள No to 10 Million Switzerland என்னும் பிரேரணை தொடர்பில், இம்மாதம் 14ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) எனக்கூறும் அந்த பிரேரணையை முன்வைத்துள்ளது.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அதாவது, நாட்டுக்குள் புலம்பெயர்ந்தோரை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் மக்கள்தொகையை பெருகவிடக்கூடாது என்னும் நோக்கில் அந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து எச்சரிக்கும் எதிரணியினர்
வாக்கெடுப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சுவிஸ் அரசு, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல தரப்பினரும் அதற்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
விடயம் என்னவென்றால், சுவிஸ் மருத்துவர்களில் 40 சதவிகிதத்துக்கு அதிகமானவர்களும், செவிலியர்களில் கால்வாசிப்பேரும், வெளிநாடுகளில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
சுவிஸ் மக்கள்தொகையில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், முதியோர்களைக் கவனித்துக்கொள்ளும் பணி செய்வோருக்கு 2030வாக்கில் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக, இப்படிப்பட்ட சூழலில், வெளிநாட்டவர்களை சுவிட்சர்லாந்துக்கு வரவிடாமல் தடுக்கும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள No to 10 Million Switzerland என்னும் பிரேரணை வெற்றிபெறுமானால், அதனால் மருத்துவத்துறையில் பணியாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என ஏற்கனவே மருத்துவத்துறையினர் எச்சரித்திருந்தார்கள்.
இந்நிலையில், தற்போது மீண்டும் மருத்துவத்துறையினர் No to 10 Million Switzerland பிரேரணை தொடர்பில் எச்சரித்துள்ளார்கள்.
மருத்துவமனைகளும் முதியோர் இல்லங்களும் வெளிநாட்டுப்பணியாளர்களையே பெருமளவில் நம்பியுள்ளதால், No to 10 Million Switzerland பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு வெற்றிபெறுமானால், அது மருத்துவத்துறையை கடுமையாக பாதிக்கும் என பிரேரணைக்கு எதிராக குரல் கொடுக்கும் அணியினர் மீண்டும் எச்சரித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |