பழிக்கு பழி! மேற்கிந்திய தீவுக்கு மரண அடி கொடுத்த இங்கிலாந்து: 55-க்கு ஆல் அவுட்
டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், மேற்கிந்திய தீவு அணி 55 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் டி20 உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 12-ஆட்டம் துவங்கியது. அதன் படி முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி, ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து ஷார்ஜாவில் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவு மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி இங்கிலாந்தை வீழ்த்தி, கோப்பையை கைப்பற்றியதால், அதை பழிவாங்குமா இங்கிலாந்து என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன் படி டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. மேற்கிந்திய தீவு அணி ஒரு இமாலய இலக்கை அடையும் என்று காத்துக் கொண்டிருந்த போது, அதை எல்லாம் சுக்கு நூறாக இங்கிலாந்து பவுலர்கள் உடைத்தனர்.
துவக்க வீரரான சிம்மன்ஸ்(3), மற்றொரு துவக்க வீரர் ஈவின் லிவிஸ்(6), கிறிஸ் கெய்ல்(13), ஷிம்மன் ஹிட்மயர்(9), டேவைன் பிராவோ(5), நிக்கோலஸ் பூரான்(1), அதிரடி வீரர் கிரன் பொல்லார்ட்(6) என அனைவரும் வந்த வேகத்தில் பவுலியன் திரும்ப, மேற்கிந்திய தீவு அணி 14.2 ஓவர் முடிவில் 55 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளரான அடில் ரஷீத் 2.2 ஓவர் வீசி 2 ஒட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
அதன் பின் 56 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரரான ஜசன் ராய் 11 ஓட்டங்களிலும், ஜானி பேர்ஸ்டோவ்(9_, மொயின் அலி(3), லிவிங்ஸ்டன்(1) என அவுட் ஆக, இறுதியாக இங்கிலாந்து அணி 8.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 56 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியில் மற்றொரு துவக்க வீரரான பட்லர் 24 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கிந்திய தீவு அணியில் அக்கில் ஹோசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.