இந்த பெண்கள் பாவம் செய்தவர்களா? விதவைகளை இஸ்லாம் ஏன் ஏற்பதில்லை?

Report Print Maru Maru in கட்டுரை
இந்த பெண்கள் பாவம் செய்தவர்களா? விதவைகளை இஸ்லாம் ஏன் ஏற்பதில்லை?
260Shares
260Shares
ibctamil.com

நீர்க்குமிழி போல யாருக்குமே நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில், இறந்த கணவனின் பொருளாக மதித்து, இருக்கும் மனைவியை ஒரு இயற்கை உணர்வு வலிக்கு ஆளாக்குவதில் யாருக்கு என்ன லாபம்?

தன்னைச் சுற்றி சுகபோகமாய் வாழும் உறவுகளின் வறட்டு கௌரவத்துக்காக, ஒரு பெண் மறுமணம் செய்யாமல் வருத்திக்கொள்ள வேண்டும் என ஒரு சம்பிரதாயம் சொன்னால், அதற்கு பின்னால் இருப்பது சிறுபிள்ளைத்தன ஆணாதிக்க சிந்தனைதான்.

மறுமணத்தை தடுப்பவர்களால் அந்த பெண்ணின் நிலை அறிந்து கள்ளத்தொடர்புக்கு வலைவிரிப்பவர்களை தடுக்க முடியுமா?

சேலத்தில் ஒரு குடும்பத்தில் ஒரு விதவையை, அவள் கணவனின் அண்ணன் தம்பிகள் மூன்றுபேர் மற்றும் சித்தி என்றும் பாராத அவர்களுடைய மகன் எல்லோரும் தனிதனியாக 8 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது வழக்குப் பதிவாகியுள்ளது. இதற்கு மறுமணம் பெருமையல்லவா?

அடிமேல் அடியான பரிகாரம்

விதவையாகிறவர்கள் பாவம் செய்தவர்கள் என்ற அரவேக்காட்டு அறிவோடுதான் இது போன்ற சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படுகிறது.

உதாரணமாக, ஒரு விபத்து நடந்து பலர் பலியாகின்றனர். பலியானவர்கள் குடும்பத்துக்கு ஆறுதலாக அரசு கொஞ்சம் நிதியுதவி அறிவிக்கிறது இது பரிகாரம்.

அதற்கு பதிலாக, பலியானவர்கள் பாவம் செய்தவர்கள் அதை விபத்துதான் கண்டுபிடித்து கொடுத்திருக்கிறது.

அதனால், பலியானவர் குடும்பத்தினர் ஒரு பெரிய தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். அந்த குடும்பத்தினரை எல்லோரும் ஊரில் ஒதுக்க வேண்டும் என்றால் எப்படி இருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு தலைகீழான செயலைதான் விதவைகள் விஷயத்தில் இந்த சமுதாயம் செய்தது, செய்துகொண்டிருக்கிறது.

முதல்மண வாழ்க்கையில் தங்களுடைய தவறுகளால் தோல்வியடைந்து விவாகரத்து பெற்று, வேறொருவரை இரண்டாவது மணம் செய்வதைவிட, விதியின் விபத்தால் கணவனை இழந்த விதவைகள் இன்னொருவரை மறுமணம் செய்வதில் விபரீதம் இல்லை.

சாரதாதேவியின் புரட்சி

ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்த பிறகு, அவருடைய மனைவி சாரதாதேவியிடம் பூ, பொட்டு, மற்றும் மங்கல ஆபரணங்களை உறவினர்கள் கழற்ற முயன்றனர், அதற்கு துணிவோடு அவர் மறுத்துவிட்டார். காரணம் அவர் பிரிந்தாலும் நான் இன்னும் அவரோடு வாழ்கிறேன்.

என் மனதிலும் நினைவிலும் அவர் நிறைந்து இருக்கிறார். அதனால், நான் விதவையே அல்ல என்றார். அவருடைய மனநிலையை ஏற்றனர். இது ஒரு புரட்சிகரமான முன்னுதாரணம்.

சாரதாதேவி விதவை அல்ல என்றுதான் மங்கலப் பொருள்களை இழக்க மறுத்தார். அதற்கு பதிலாக ஒரு விதவையே இழக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் வாதிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திக்கும்.

காரணம் ஒரு பெண்ணுக்கு பூ, பொட்டு எல்லாம் கணவனுக்கு முன்பே சேர்ந்ததுதான். கணவன் கட்டிய தாலியை மட்டும் கழற்றிவிட்டு, மறுமணத்தில் வேறு அணிந்து கொள்வது நியாயமானது.

இஸ்லாமில் மறுமண அனுமதி

கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்வதை இஸ்லாம் மதம் அனுமதிக்கிறது. இறைவன் பற்றிய கருத்துக்களோடு நில்லாமல், நிறைய வாழ்வியல் சிந்தனைகளையும் நபிகள் போதித்திருக்கிறார்.

விதவை மறுமணம் மட்டுமல்ல, கணவன் மனைவியிடையே கருத்து வேறுபட்டாலும் 40 நாட்கள் கணவன் பிரிந்திருந்தால் கூட அந்த பெண் வேறொருவரை திருமணம் செய்துகொள்ளலாம் என்ற திருமண சுதந்திரம் பெண்களுக்கு இஸ்லாமில் வழங்கப்படுகிறது.

வேறொருவரை மணப்பதற்கு முன் அந்த பெண் முதல் கணவனின் கருவை வயிற்றில் சுமந்திருக்கிறாளா என்பதை அறிவதற்கே இந்த 40 நாட்கள். மனிதர்களின் இயற்கையான உணர்வு வலிகளுக்கு நியாயமான சிகிச்சை அளிப்பது மதங்களின் தெய்வீகமான அணுகுமுறை.

பயங்கரமான பழைய வழக்கம்

இந்தியாவில் கணவன் இறந்த பிறகு, மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. அதை ராஜாராம் மோகன்ராய் போன்றவர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

ஆனால், அதற்கு பதிலாக விதவைகளுக்கு மொட்டையடித்து, வெண்ணிற ஆடை உடுத்தி, மற்றவர் முகத்தில் முழிக்காதபடி, முக்காடுபோட்டு மூலையில் வைக்கும் கொடுமையான பழக்கத்தை திணித்தனர்.

அந்த செயல் ஒரு பெண்ணை மனதளவில் எவ்வளவு அதலபாதாளத்துக்கு கொண்டுசெல்லும். பெரிய குற்றங்களுக்கு கொடுக்கும் தண்டனை போன்ற அந்த செயலை, குழந்தை விதவைகளுக்கும் கொடுத்தது இந்த சமூகம்.

ஆனால், விதவைகள் மறுமண விஷயத்தில் இப்போது பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அவளின் முக்கிய உறவினர்களை தவிர சமுதாயம் தலையிடுவதில்லை.

மறுமணம் ஒரு திருத்தமே

கணவனின் மரணம், இளம்மனைவிக்கு மா ரணம். மரணத்துக்குப் பிறகு மீண்டும் வரமுடியாத கனவனுக்காக. மரணம் வரை விடமுடியாத விதவைக்கோலமா?

கணவனை இழந்த பெண்கள் உருவாவது போல, மனைவியை இழந்த கணவர்கள் உருவாவதை மறுமணத்தில் பொருத்திப்பார்த்தால், கடவுளின் கணக்கு பழமைவாதிகளுக்கும் புரியவரும்.

இளம் விதவையின் மறுமணத்தை மறுத்தால், திருமணமே தீய சிந்தனையாகிவிடும். திருமண விதிக்குள் மறுமணமும் அடக்கம்.

முறையான ஒப்பந்தம் என்றால், அதன் லாப, நஷ்டங்களிலும் பாரபட்சம் இல்லாத நியாய பரிபாலனைகள் தொடர வேண்டும். இல்லாவிட்டால் நம்பி வந்தவர்களுக்கு செய்யும் மோசடியாகும். திருமணமும் அப்படியாகும்.

பூமியில் வாழும்வரை எல்லோருக்கும் மகிழ்ச்சியும் துணையும் தேவைப்படுகிறது. மரணம் ஒன்றுதான் ஒரு மனித பயணத்துக்கு நிரந்தர முடிவு வழங்குகிறது. விதவை நிலை இடையில் வரும் ஒரு சோதனையே மனித வக்கிரங்கள்தான் அதை முடிவாக்குகிறது. அது மீறலையும் குழப்பங்களையுமே விலையாக்கிறது.

உணர்ச்சிகள், மனித கருவியான நம்மை கடவுள் கையாள பயன்படுத்தும் ‘ஸ்விச்’சுகள் என்பதை மறுக்க முடியுமா?

மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments