அமெரிக்காவின் ஹாப்பி ஜூலை!

Report Print Nivetha in கட்டுரை
அமெரிக்காவின் ஹாப்பி ஜூலை!

உலக வல்லரசுகளின் முதன்மையாக அமெரிக்காவை குறிப்பிடலாம்.உலகத்தில் எந்தவொரு நாட்டின் அரசியல் நிலைப்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தனிப்பெரும் சக்தியாக அமெரிக்காவின் ராஜதந்திரம் உள்ளது.

அவ்வாறு உலகின் ராஜாவாக திகழும் அமெரிக்கா இன்று தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. உலகின் பல அரசியல் மாற்றங்களுக்கு அமெரிக்கா ஓர் காரணமாகும். அது மட்டும் இன்றி ஜனாதிபதி ஆட்சிக்கு மிக சிறந்த எடுத்து காட்டாக அமெரிக்காவை கூறாலாம்.

உலகில் மிக சிறந்த செனற்சபை அமெரிக்காவில் தான் காணப்படுகின்றது. மக்களால் மக்களுக்கான மக்களின் ஆட்சி இங்கு வேரூண்டிக்காணப்படுகின்றது எனக் கூறினால் மிகையாகாது.

அதிகாரத்தினாலே,பலத்தினாலே அசைக்க முடியாதா அமெரிக்காவை அட்லாண்டிக் கடல்பகுதியில் அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று குடியேற்ற நாடுகளும் இணைந்து முதலில் நிறுவியது.

1770ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சி போருக்கு காரணமாக அமைந்தது.

இந்த போர் 1775ஆம் ஆண்டு முதல் 1781ஆம் ஆண்டு வரை நிகழ்ந்தது. ஜூன்14, 1775இல் பிலடெல்பியாவில் கூடிய கண்ட மாநாடு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் ஒரு கண்ட அளவிலான இராணுவத்தை அமைத்தது. அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் குறிப்பிட்ட அந்நியப்படுத்த முடியாத உரிமைகள்” அளிக்கப்பட்டுள்ளார்கள் என்கிற பிரகடனத்துடன், இந்த மாநாடு சுதந்திர பிரகடனத்தை நிறைவேற்றியது.

1776ஆம் ஆண்டு ஜுலை 4 ஆம் திகதி இந்த பிரகடன வரைவு தாமஸ் ஜெபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. இந்த திகதியில்யில்தான் இப்போது ஆண்டுதோறும் அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அமெரிக்க அரசியல் சட்டம் 1788 ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது. புதிய குடியரசின் முதல் செனட், பிரதிநிதிகள் அவை, மற்றும் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் 1789ஆம் ஆண்டில் பதவியேற்றுக் கொண்டார்.

தனிநபர் சுதந்திரத்தின் மீதான ஐக்கிய கட்டுப்பாடுகளை தடைசெய்வது மற்றும் பல வகையான சட்டப்பூர்வ பாதுகாப்புகளை உறுதி செய்வதற்கான உரிமைகள் மசோதா 1791ஆம் ஆண்டில் நிறைவேறியது.

அமெரிக்க விடுதலைப் பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளாத இங்கிலாந்து இரண்டு தடவை தாக்குதல் நடத்தியுள்ளது.

தற்போது அமெரிக்க விடுதலை அடைந்து பொருளாதார ரீதியாகவும், இராணுவ பலத்துடனும் உலகின் வலிமை வாய்ந்த நாடாக மிளிர்கின்றது.

அமெரிக்கா என்பது ஐரோப்பா முழுவதிலிருந்தும் வந்து குடியேறியவர்களால் உருவான நாடு. ஜூலை 4 அமெரிக்க சுதந்திர தினம் என்பது மாறி தற்போது அவர்கள் ஹாப்பி ஜூலை 4 என்றே வாழ்த்திக் கொள்கின்றனர். பிரித்தானிய ஆட்சியை எதிர்த்து போராடியதால் பதின்மூன்று நாடுகளாக உதித்த அமெரிக்கா இன்று ஐம்பது மாநிலங்களின் ஒன்றியமாக தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது.

மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments