பேய்கள் இருப்பது உண்மையா.?

Report Print Abhimanyu in கட்டுரை
488Shares
488Shares
lankasrimarket.com

அன்றாடம் பல அமானுஷ்யங்களை மனித மனம் எதிர்ப்பார்த்து கொண்டே இருக்கும்.

பேய்கள் உண்மையா.? பேய்களை பார்த்தீர்களா.? பேய்களுக்கு அகோரம் உண்டா? பேய்கள் என்ன செய்யும்?

இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் சத்தியமாய் இப்பதிவில் பதில் கிடையாது. பேய், பிசாசு பற்றி எதாவது பதிவு போட வேண்டும் என்று எண்ணம். அதான் எழுதிவிட்டேன்!

“நேத்து நா கடவுள பாத்தேன்” என யாராவது நம்மிடம் கூறினால் அதை நாம் போதையில் உலருகின்றான். என்போம் அதுவே யாராவது இரவு நேரத்தில் “டேய் அது பேய்வீடுடா” என்று சொன்னால் மறுநிமிடமே பயந்துவிடுகிறோம்.

என்னதான் நம்மில் பல பேர் சபைகளில் பயப்பிடாதவர்கள் போல் நடித்தாலும் தனியாக இருக்கும் போது அதுவும் இரவுநேரத்தில் சில இயற்கையான சத்தங்கள் ஏற்படும் போது பயந்து கொண்டு தான் இருக்கின்றோம்.

மனித இனம் மட்டும் இவ்வுலகில் தனித்து காணப்படுவது இல்லை, மிருக இனங்களும் உண்டு.

அப்போது இறைச்சிக்காக கொல்லப்படும் கோழிகளும், ஆடுகளும், மாடுகளும் ஏன் போயாக அலைவதில்லை? எல்லாமே உயிர்கள் தானே ஏன் இந்த வேறுபாடு?

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலைகளில் ஆயிரமாயிரம் உயிர்கள் பலியாயின அவர்கள் எங்கே இப்போது இடுகாடுகளுக்கு மத்தியில் குடியேற்றங்கள் காணப்படவில்லையா?

சரி இப்போது பேயை பற்றி சில சுவாரஸ்சிய விடயங்களை பார்ப்போம்

 • தங்களை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பும் பேய்கள் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.
 • பேய்கள் அல்லது ஆவிகள் ஆபத்தானவை அல்ல. விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.
 • எமது எதிர்காலத்தைபற்றி பேய்கள் நன்றாகவே தெரிந்து வைத்துக் கொண்டு சில நேரங்களில் அவற்றை கனவுகளின் மூலம் வெளிப்படுத்த முயற்சி செய்யும்.
 • பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings) உண்டு. ஆனால் உணர்வு (sense) மட்டும் இல்லை.
 • பேய்கள் அல்லது ஆவிகளால் கொலை செய்ய முடியாது. ஆனால் ஒருவன் தன்னைத்தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு.
 • பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்களுக்கு மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும்.
 • பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) ‘O’ (+) அல்லது O’ (–) ஆக இருக்கும். மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வமாம்.
 • குழந்தை பேய்கள் தேவதைகள் என அழைக்கப்படுவார்களாம்.
 • பேய்கள் மனிதனுடன் தொடர்பு கொள்வதற்காக கனவுகள், மர்ம குறியீடுகள், தானாக எழுதுவது, சத்தம், புகை, போன்ற பல்வேறு வகையான தந்திரங்களை பயன்படுத்துகின்றன.
 • அமைதியான நிசப்த்தமான இடங்களில் நேரங்களில் திடீரென சத்தத்தை உண்டாக்கி திகிலூட்டுவது பேய்களுக்கு பிடித்த விஷயமாம்.
 • பேய்களுக்கு நேரம் காலம் தெரியாது என்றாலும், நள்ளிரவு நேரங்களில் பகலை விட கூடுதலாக அலையும். இலத்திரனியல் பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள் வராது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால், பேய்களுக்கு இலத்திரனியல் பொருட்களின் வேகத்தையும், அதன் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சக்தி உண்டு.
 • பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக் கோடுகள், மூடுபனி, ,கருநிழல், நிழலுக்குள் நிழல், மங்கலாக தெரிவது, கரு உருவம், காற்றுத் தூசிகள், காற்று போன்றவைகள் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றன. முழு உருவத்தையும் வெளிப்படுத்துவது இல்லை. ஆனால் அதற்கான சாத்தியம் உண்டு. சலங்கை சத்தம், பெண்குரல் சிரிப்பு போன்றவை சினிமாவில் காண்பிக்க படும் அனைத்தும் கற்பனை மட்டுமே.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் உண்மை என்றாலும் பயப்பட தேவையில்லை. இவை பேய்களை பற்றிய மூட நம்பிக்கையை வளர்க்கும் நோக்கில் எழுதவில்லை.

பேய் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் பொழுதுபோக்காக படித்து தெரிந்து கொள்வதற்காகவே.

இதையேல்லாம் படிக்கும்போது அவ்வபோது கொஞ்சம் திரும்பித் திரும்பி பார்த்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் பின்னால் ஒரு பேய் அல்லது ஓர் உருவம் இதே பதிவை படித்து கொண்டு இருக்கலாம்...

(சிறிய விண்ணப்பம் இவை அனைத்தும் இவனுக்கு மட்டும் எப்படிதெரியும் என திட்டாதீர்கள் சற்று தேடியவையின் தொகுப்பே)

மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments