மனிதனின் ரசனை ஆற்றலை பண்முகப்படுத்துவதே புகைப்படங்கள்

Report Print Abhimanyu in கலை
115Shares
115Shares
lankasrimarket.com

லண்டன் உயிரியல் கழகத்தின் 2016ஆம் ஆண்டுக்கான புகைப்பட கண்காட்சி ஒன்று அண்மையில் நடைபெற்றிருந்தது. அவ்வாறான சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு,

புகைப்பட கண்காட்சியில் முதல் பரிசைப் பெற்ற படம் இது. இந்தியாவின் சால்கேவாடி பீடபூமிப் பகுதியில் இந்த விசிறிவகைப் பச்சோந்தியின் படத்தை எடுத்தவர் ப்ரதீக் பிரதான்.

இளையோருக்கான பிரிவில் பங்கேற்று பரிசு வென்றவர் “அலீசியா ஹேய்டன்”. ஐல் ஆஃப் மேன் பகுதியில் சிறகடித்து பறக்கும் “ஆர்ட்டிக் டெர்ண்” ஜோடியை அவர் படம் பிடித்தார். கறுப்பு வெள்ளையில் இந்தப் படம் மிகச்சிறப்பாகவுள்ளது எனத் தேர்வுக் குழு பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

'முடிந்தால் பிடியுங்கள்' என்ற தலைப்பில் “அலெக்சாண்டர் ஹோல்டன்” மீன்கொத்திப்பறவை லாவகமாக ஒரு மீனைப் பிடித்த காட்சியை படமாக்கியுள்ளார்.

“வித்தியாசமான படங்கள்” எனும் பிரிவில் “மைக் ரெயிஃப்மேன்” இப்படத்தை பதிவுசெய்துள்ளார். கூட்டத்தில் வித்தியாசமாகத் தெரியும் பென்குயினை இப்படம் பிரதிபலிப்பதோடு இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.

அஸ்த்தமன வேளையில் நீரோடை ஒன்றில் வாய் பிளந்த நிலையில் இருந்த நீர் யானையை படம் பிடித்தவர் “ஜெரிமி க்யூசாக்”. இந்தப் படத்தை “சூரிய ஒளியில்”எனும் தலைப்பின் கீழ் வகைபடுத்தியுள்ளார்.

நகர வாழ்க்கை எப்படியுள்ளது என்பதைக் காட்டும் இப்புகைப்படம் “ஒஸ்கான் ஒஸ்மெனால்” எடுக்கப்பட்டது. குரங்குக் குட்டி ஒன்று வழி தெரியாமல் வாகனத்துக்கு அருகில் நிற்கும் இந்தப் படம் நகர வாழ்க்கையின் யதார்த்தங்களை காட்டுக்கின்றது.

குடிநீருக்காக குரங்கும் அலையும் இப்படத்தை எடுத்த “கார்லோஸ் பெரெஸ் நவால்” 'குடிநீருக்கான உத்திகள்' என்ற தலைப்பில் இளையோருக்கான பிரிவில் பரிசு பெற்றார்.

நீரிலிருந்து தலையைத் தூக்கிப்பார்க்கும் இந்தத் தவளையின் படத்தை “கிடியன் நைட்” அருமையாக பதிவுசெய்துள்ளார்.

- BBC - Tamil

மேலும் கலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments