சிற்ப கலையில் சிறந்து விளங்கும் கோவில்கள் இவைகள் தான்

Report Print Raju Raju in கலை

சோழ மன்னர்கள் ஆண்ட காலங்கள் கட்டிட கலைக்கு மிக சிறப்பான காலங்களாக அமைந்தன. ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்றவர்கள் காலம் கடந்து நிற்கும் கலை நயமிக்க, சிறப்பான சிற்பகலை கொண்டு உருவாக்கிய கோவிலகளை கட்டினார்கள்.

புகழ் வாழ்ந்த சில கோவில்கள் பற்றி தற்போது காண்போம்

தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் என சொன்னவுடன் எல்லோருக்கு நினைவுக்கு வருவது தஞ்சை பெரிய கோவில். இது தஞ்சை பிரகதீசுவரர் கோவில் மற்றும் தஞ்சை பெருவுடையார் கோவில் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் அமைந்துள்ள கோவில்களில் மிக பெரிய ஒன்றாக கருதப்படும் இந்த கோவிலின் கட்டிட கலை மிகவும் பிரசத்தி பெற்றதாகும். இன்று தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாக தஞ்சை பெரிய கோவிலானது 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட மிக பிரபலமான கோவில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஆகும். சிற்பக்கலைக்கு இந்த கோவிலானது மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. சிவன் கோவிலான இங்கு தான் தமிழ்நாட்டிலே மிக பெரிய அளவிலான லிங்கம் அமைந்துள்ளது.
இந்த லிங்கமானது 13.5 அடி உயரமும், 60 அடி கற்றளவும் கொண்டதாகும். தஞ்சை கோவிலுக்கு அடுத்து இந்த கோபுர விமானம் தான் தமிழகத்திலேயே பெரியதாகும். இந்த கோபுர கலசத்தின் நிழலானது பூமியில் விழாது என்பது மிகவும் அதிசயமானதாக கருதப்படுகிறது.

பலருக்கு அதிகம் தெரியாத கோவிலாக கும்பகோணம் மாவட்டத்தின் தரசுராம் நகரில் அமைந்துள்ள ஐராவதேஸ்வர கோவில் இருக்கிறது. ஐராவதம் என்றால் வெள்ளை யானை என பொருள். கலை வேலைபாடுகளின் உச்சமாக இந்த கோவிலானது திகழ்கிறது.

பல சிற்ப வேலைபாடுகளை கொண்டதாக திகழும் இந்த கோவிலின் கோபுரமானது 80 அடி உயரம் கொண்டதாகும். இக்கோவிலின் மண்டபத்தில் மட்டும் 100 தூண்கள் எழுப்பப்பட்டு ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments