தமிழனின் அறிவுக்கு மற்றுமொரு சான்று! அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விடயம்

Report Print Raju Raju in கலை

கோவில் இல்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம் என்பது முன்னோர்களின் வாக்கு, இதேபோன்று கோவில் கோபுரத்தை விட உயரமான கட்டிடம் அமைந்துள்ள ஊரில் இருக்க கூடாது என்பது சம்பரதாயமாக இருந்தது.

அது ஏன் தெரியுமா?

கோபுரங்கள் உச்சியில் கலசங்கள் எப்போதும் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம், அதன் உள்ளே கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் வலிமையை கலசங்களுக்கு தருகின்றன.

வரகு, சாமை, கம்பு போன்ற பல தானியங்களை அதில் கொட்டினாலும் வரகு இடி மின்னலை தாங்கும் ஆற்றலை பெற்றது என்பது அறிவியல் கூறும் உண்மையாகும்.

அதே போல அந்த கலசத்தில் உள்ள தானியங்களானது பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும் என்பது பல கால நடைமுறையாகும்.

மிக உயரத்தில் அமையும் அந்த கோபுர கலச இடி தாங்கியானது பெரும் மழை காலத்தில் ஏற்படும் இடிகளை மொத்தமாக தாங்குகிறது.

அது அந்த அளவுக்கு மக்களை காப்பற்றும் என்பது கோபுரத்தின் உயரம் அளவை பொருத்தே உள்ளது.

உதாரணமாக கோபுர உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை நபர்கள் இருந்தாலும் இடியில் விழாமல் காப்பாற்றபடுவார்கள். அதை விட உயர கோபுரம் என்றால் அதன் கணக்கு வேறுபடும்.

இது இன்று அறிவியல் பூர்வமாக கூறப்பட்டாலும் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது பிரம்மிப்பாக தான் இருக்கிறது.

மேலும் கலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments