கோலாகலமாக நடைபெற்று முடிந்த யாழ் இந்துவின் சாரணர் நூற்றாண்டு விழா

Report Print Samaran Samaran in கலை

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவின் நூற்றாண்டு நிறைவு விழா 22.02.2018 வியாழக்கிழமை அன்று கல்லூரி சபாலிங்கம் அரங்கில் துருப்புத்தலைவர் செல்வன் ப.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இந்துவின் பழைய மாணவனும் வடமாகாண ஆளுநர் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னைநாள் சாரணர்களான வைத்தியர் சி.ஜமுனானந்தா, திரு.ந.கௌரிதாசன் (உதவி திட்டமிடல் பணிப்பாளர் கிளிநொச்சி) திரு.ந.ராஜ்குமார் (கென்ரவர் குழு தலைவர்) திரு.ந.ஐங்கரேசன் (இளநிலை நிறைவேற்று அதிகாரி இலங்கை வங்கி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பானது 1916ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தலைமைத்துவம் மிக்க தலைவர்களை எமது தேசத்திற்கு வழங்குவதில் பெரும்பங்காற்றுகின்றது. தொடர்ச்சியான சாரணிய சேவையில் பல மைல் கற்களை உருவாக்கி யாழ் இந்துவின் வரலாற்றில் மட்டுமல்லாது தேசத்தின் வரலாற்றிலும் சிறப்பான இடத்தினை வகிக்கின்றது.

நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஆவணக் கண்காட்சி இரத்ததான முகாம் ஆடிப்பிறப்பு விழா மற்றும் பழைய சாரணர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட 'இந்துபோறி' நூற்றாண்டுக் பயிற்சி பாசறை ஆகியன சிறப்பாக நடந்தேறியது. நூற்றாண்டு இறுதி நிகழ்வாக நூல் வெளியீட்டுடன் கூடிய நூற்றாண்டு விழா நிறைவு விழா கோலாகலமாக இடம்பெற்றது.

நிகழ்வுகள் அனைத்தும் கல்லூரி ஞானவைரவர் ஆலய பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து கல்லூரிக் கொடி அதிபர் சதா நிமலன் அவர்களாலும் சாரணிய கொடி ஆசிரியர் திரு.க.சுவாமிநாதன் அவர்களாலும் மற்றும் உலக சாரணர் கொடி திரு.செ.தேவரஞ்சன் அவர்களாலும் ஏற்றப்பட்டு சாரணர்களின் அணிவகுப்பு மரியாதை மற்றும் சிலம்பாட்ட அணியினரின் அணிவகுப்புடன் விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடள் அகவணக்கம் இறை வணக்கம் சாரணர் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது. உதவித்துருப்புத் தலைவர் செல்வன்.கோகுலரமணன் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது. தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனம் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர் அவர்கள் உரையாற்றுகின்ற போது யாழ் இந்துக் கல்லூhயிpல் இருந்து பல்வகை ஆளுமைமிக்க சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் சாரணர் குழுவின் பங்கு அளப்பரியது எனக் குறிப்பிட்டதோடு குழுச்சாரணப் பொறுப்பாசிரியர் திரு.க.சுவாமிநாதன் செயற்பாடு 'தேனீ' போன்றது என புகழ்பூத்ததோடு இது போன்று கல்லூரியில் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் எனக்குறிப்பிட்டார்.

கல்லூரி அதிபர் குறிப்பிடுகையில் சாரணியர் ஒருவர் அங்கத்துவச் சின்னம் பெற்றது முதல் சனாதிபதி விருது பெற்ற பின்பும் சாரணியனாகவே செயற்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்தும் கல்லூரி சாரணர் குழுவின் செயற்பாடு தற்போது சிறப்பாக செயற்படுவதாகவும் இதற்கு குழுச்சாரணிய பொறுப்பாசிரியர் க.சுவாமிநாதன் மற்றும் கல்லூரி திரிசாரணர்களின் பங்களிப்பு மற்றும் சாரணர் ஆசிரியர் திரு.ஜீவகநாதனின் பங்களிப்பு அளப்பெரியது எனக் குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினர்கள் தமது வாழ்வில் சாரணியர் வழங்கிய மேம்பாடு தொடர்பாக தமது அனுபவரீதியான கருத்துக்களை முன்வைத்தார்.

கல்லூரி சாரணர் துருப்பின் ஆவணங்கள் அடங்கிய 'யாழ் இந்து சாரணியத்தின் ஒளிக்கீற்று' இறுவட்டு வெளியீடு செய்து வைக்கப்பட்டது. இந்த இறுவெட்டினை கல்லூரி அதிபர் திரு.சதா நிமலன் அவர்கள் வெளியிட சிறப்பு விருந்தினர் திரு.ந.ராஜ்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இந்த இறுவெட்டில் முன்யை சாரணி ஆண்டு விழா மலர்கள் நூற்றாண்டு சாரணிய கீதம் இந்துப்போறிப் பாடல் மற்றும் நூற்றாண்டு வரலாற்று ஒலித்தொகுப்பு ஆகியன உள்ளடக்கப்பட்டிருந்தது.

நூற்றாண்டு நிகழ்வின் குறிப்பிடத்தக்க நிகழ்வாக சாரணர் துருப்பிலிருந்து உயிர்நீத்த முன்னைய சாரணர்களுக்கான கௌரவிப்பு அவர்களின் பெற்றோருக்கு வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக நூற்றாண்டு மலர் வெளியீடு செய்யப்பட்டது.

நூற்றாண்டு மலரின் முதற்பிரதியினை முன்னைநாள் அதிபர் திரு.அ.பஞ்சலிங்கம் அவர்கள் வெளியிட்டு வைக்க பிரதம விருந்தினர் அவர்கள் பெற்றுக்கொண்டார். சிறப்பு பிரதிகளை விருந்தினர்கள் பழைய சாரணர்கள் கல்லூரி ஆசிரியர்கள் அயற்பாடசாலை சாரணர்கள் மற்றும் பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.

நூலிற்கான மதிப்புரையினை முன்னாள் சாரணனும் யாழ் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளருமாகிய திரு.தி.செல்வமனோகரன் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து இதழாசிரியர் உரை செல்வன்.டினுசாந் அவர்களினால் வழங்கப்பட்டது.

நூற்றாண்டு விழா நிகழ்வில் கல்லூரி அதிபர் திரு.சதா நிமலன் குழுச்சாரணத் தலைவர் திரு.க.சுவாமிநாதன் திரிசாரணத் தலைவர் திரு.மு.ஜோதீஸ்வரன் மாவட்ட ஆணையாளர் திரு.செ.தேவரஞ்சன் மற்றும் கௌர பிரதம விருந்தினர்களின் உரை இடம்பெற்றது.

நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 21.02.2018 தொடக்கம் 22.02.2018 வரையிலான ஒரு இரவுடன் கூடிய மாவட்ட பாசறைப் போட்டிகள் யாழ் இந்து சாரணர் குழுவினால் ஒழுங்கமைப்பட்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பங்கு பற்றி வெற்றி கொண்ட அயற்பாடசாலை துருப்புக்களுக்கான கேடயங்கள் வழங்கப்பட்டன.

முதலாம் இடத்தினை சென்.பற்றிக்ஸ் கல்லூரியும் இரண்டாம் மூன்றாம் இடங்களை யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி பெற்றுக்கொண்டது. தொடர்ச்சியாக கலை நிகழ்வுக் சிறப்பாக இடம்பெற்றது.

சாரணிய நூற்றாண்டினை சிறப்பிக்கும் வகையிலான வில்லுப்பாட்டு நிகழ்வு நடைபெற்றது. இதன் ஊடாக நூற்றாண்டு வரலாற்று சிறப்பு மிகு தருணங்கள் சுவாஸ்ரயமான முறையில் எடுத்துக்காட்டப்பட்டது. 1966ஆம் ஆண்டு யாழ் இந்து சாரணியத்தின் 50 ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு மேடை ஏற்றப்பட்ட சமூக நாடகமான 'தரைசைன்பாம்' நாடகம் மேடையேற்றப்பட்டது.

இறுதி நிகழ்வாக யாழ் இந்து அன்னை உருவாக்க வேண்டியது 'தலைவர்களையா?? அல்லது புரட்சியாளர்களையா' என்ற தலைப்பினால் சிறப்பு பட்டிமன்றம் முன்னாள் குழுச்சாரணத் தலைவர் திரு.பொ.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை நடுவராகக் கொண்டு இடம்பெற்றது பட்டிமன்றத்தில் கல்லூரி சாரணர்களும் பழைய சாரணர்களும் இணைந்து கலந்து கொண்டனர்.

விருந்தினர்களுக்கான நினைவுக் கேடயங்கள் வழங்கப்பட்டது. நூற்றாண்டு நிறைவு விழா செல்வன்.து.வைத்தீஸ்வரன் அவர்களின் நன்றியுரையுடன் கல்லூரிக்கீதத்துடனும் மாலை 6.30 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது. நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் பழைய சாரணர்கள் பெற்றோர்கள் அயற்பாடசாலை சாரணர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் கலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers