செல்ல நாய்க்கு 8 ஐபோன்கள்! ஒரே ஒரு படத்தால் உலகப் பிரபலமானது

Report Print Basu in ஆசியா

சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் ஒருவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ-போன் 7 போன்கள் 8-ஐ தனது செல்லப் பிராணியான நாய்க்கு வாங்கிக் கொடுத்துள்ள சம்பவம் இணையத்தளம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளது.

தொழிலதிபர் வாங் ஜெயின்லின் 28 வயது மகனான வாங் சிகாங்னே தான் செல்லமாக வளர்க்கும் கோகோ என்ற நாய்க்கு எட்டு ஐ-போன் 7-களை பரிசாக அளித்துள்ளார்.

சிகாங் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில், கோகோ அமர்ந்த நிலையில் அதனைச் சுற்றி எட்டு ஐ- போன் 7-கள் கிடக்கிறது.

இந்தப் புகைப்படத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இதன் மூலம் கோகோ மற்றும் அதன் உரிமையாளர் சீனா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளனர்.

சீனாவின் பணக்கார நாய் என அந்நாட்டு செய்திதாள்களில் எல்லாம் வந்து கோகோவின் பெயர் வெளியாகியுள்ளது.

வான் சிகாங் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஆப்பிள் வாட்ச் இரண்டை கோகோவுக்கு அணிவித்து அழகு பார்த்துள்ளார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments