அழகில் மயங்கிய இளைஞர்! இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு சிறை

Report Print Maru Maru in ஆசியா
275Shares
275Shares
lankasrimarket.com

சிங்கப்பூரில் ஆசிரியை வாயில் மதுவை ஊற்றி வன்புணர்வு செய்த குற்றத்துக்காக அந்த நாட்டின் நீதிமன்றம் 11 ஆண்டு சிறையும் 12 சவுக்கடிகளும் இந்திய வம்சாவளி இளைஞருக்கு தண்டனையாக விதித்துள்ளது.

இந்திய வம்சாவளியினரான பிரேம் நாயர் (27) சிங்கப்பூரில் கடலோர ரோந்துப்பணியில் பணியாற்றி வந்தார்.

கடந்த 2012, மே 6 ம் தேதி அங்குள்ள சிலோசோ கடற்கரை பகுதியில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதே கடற்கரையில் ஒரு இளைஞருடன் போதையில் சுற்றிக் கொண்டிருந்த அழகிய இளம்பெண்ணைக் கண்டார்.

காவலராக இருந்த பிரேம் அந்த பெண்ணுடன் வந்த இளைஞனை அதிகார தோரணையில் விரட்டிவிட்டார். பிறகு, அரை மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணை கடற்கரையிலே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். ஒரு ஆசிரியையான அந்த பெண் மறுத்துள்ளார். உணர்ச்சிவசப்பட்ட பிரேம், மதுவை பெண்ணின் வாயில் மேலும் ஊற்றி மயக்க நிலைக்கு கொண்டுசென்று வன்புணர்வு செய்துள்ளார்.

வாயில் நுரைதள்ளியபடி மயக்க நிலையில் கற்பழிக்கப்பட்டபடி நிர்வாணமாக கிடந்த அந்த பெண்ணை அவ்வழியாக, வந்த சிலர் ஆடைகளை சரிசெய்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், சிகிச்சை பெற்றபின் தேறி வீடு திரும்பியுள்ளார்.

கற்பழிப்பு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட பிரேம் நாயர் உடனே பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.

கோர்ட்டில், போதையில் இருந்த அந்த இளம்பெண், தன்னுடன் உல்லாசமாக இருக்க எனது கட்சிக்காரரை அழைத்தார், அதனால்தான், என் கட்சிக்காரர் உடலுறவு வைத்துக்கொண்டார் என்று பிரேம் நாயர் தரப்பு வக்கீல் வாதாடினார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த அரசு தரப்பு வக்கீல், கவிதா உத்ராபதி போதையில் இருந்தார் என்ற காரணத்துக்காக அந்த பெண் உடலுறவு வைத்துக்கொள்ள அழைத்தார் என்பதை ஏற்றுக்கொண்டால், ஆசிய நாடுகளில் போதையில் இருக்கும் பெண்கள் எல்லாம் உடலுறவுக்கு ஆசைப்பட்டு மற்றவர்களை அழைப்பவர்கள் என்பது போன்ற ஒரு கருத்தை உண்டாக்கிவிடும்.

எனவே, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக 16 ஆண்டுகள் சிறையும் 15 சவுக்கடிகளும் விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இருதரப்பு வாதத்தையும் பரிசீலித்த நீதிபதி, குற்றவாளியான பிரேம் நாயருக்கு 11 ஆண்டு சிறையும் 12 சவுக்கடிகளும் தண்டனையாக விதித்து தீர்ப்பு அளித்தார்

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments