விமான கழிப்பறையில் குழந்தையின் சடலம்! பொலிசார் தீவிர விசாரணை

Report Print Jubilee Jubilee in ஆசியா
390Shares
390Shares
lankasrimarket.com

கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து இந்தோனேஷியா வந்த விமானத்தில், குழந்தையின் உடல் கழிவறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தோகாவில் இருந்து இந்தோனேஷியாவுக்கு வந்தது.

அப்போது பணியாளர்கள் விமானத்தை சுத்தம் செய்யும் போது கழிப்பறையில் ஒரு குழந்தை இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இது குறித்து விமான நிலைய செய்தி தொடர்பாளர் Endang கூறுகையில், விமான கழிப்பறையில் பேப்பர் சுற்றப்பட்ட நிலையில் குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த குழந்தை பிறந்து 5 முதல் 7 மாதங்கள் இருக்கலாம். இது தொடர்பாக பெண் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவர் உண்மையான குற்றவாளியா என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments