அந்த மாதிரியான படத்தை பதிவிட்ட ஓரினச் சேர்க்கை ஜோடி: வைரலானதால் நேர்ந்த துயரம்

Report Print Basu in ஆசியா
606Shares
606Shares
lankasrimarket.com

இந்தோனேஷியாவில் பேஸ்புக் பக்கத்தில் முத்தமிடும் புகைப்படம் வெளியிட்ட குற்றத்திற்காக ஓரினச் சேர்க்கை ஜோடிக்கு 7 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.

Manado நகரத்தை சேர்ந்த 22 வயது மாணவனும், 24 வயது அலுவலக ஊழியரும் குறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 9ம் திகதி இருவரும் மேலாடையின்றி முத்தமிடும் புகைப்படத்தை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதை பார்த்த இணைய பயனர்கள் பலர் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து பொலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

பொலிசார் அளித்துள்ள தகவலில், கைது செய்யப்பட்ட இருவரும் புகைப்படத்தில் இருப்பது தாங்கள் தான் என ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஓரினச் சேர்க்கை ஜோடி கூறியதாவது, தங்களின் காதலை நிரூபிக்கவே இவ்வாறு புகைப்படத்தை வெளியிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம், பேஸ்புக்கை தொடர்பு கொண்டு குறித்த ஆபாச புகைப்படத்தை தடை செய்துள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments