டிரம்ப்- புடின் போன் உரையாடல்! வெளியானது அதிரடி கூட்டறிக்கை

Report Print Basu in ஆசியா
384Shares
384Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதியேற்றுள்ள டிரம்ப் முதன் முறையாக ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் தொலைபேசியில் உரையாற்றியுள்ளார்.

புடின் உட்பட உலக தலைவர்கள் பலருக்கு டிரம்ப் தொலைபோசி மூலம் அழைப்பு விடுத்து பேசியுள்ளார்.

இந்த தொலைபேசி அழைப்பு குறித்து ரஷ்ய ஜனாதிபதியின் கிரம்ளின் மாளிகை தெரிவித்ததாவது,

அமெரிக்கா- ரஷ்யா ஆகிய 2 நாடுகளும் சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவது என்றும் குறிப்பாக சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் சில தீவிரவாத அமைப்புகளை அடக்கி ஒடுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு, மற்றும் அரபு-இஸ்ரேல் மோதல். அணு ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் ஈரான் அணுசக்தி திட்டம். வட மற்றும் தென் கொரியா பிரச்னை. உக்ரேனில் உள்ள நிலைமை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

வெள்ளை மாளிகை கூறியதாவது, இரு நாட்டின் உறவை மேம்படுத்துவதற்கான ஒரு தொடக்கமே இந்த தொலைபேசி அழைப்பு என குறிப்பிட்டுள்ளனர்.

ரஷ்யா மட்டுமின்றி ஜப்பான், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா நாட்டு தலைவர்களுடன் டிரம்ப் பேசியுள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments