காதலில் தோல்வியடைந்த இளைஞன் செய்த செயல்: காதலர்களுக்காக திறக்கப்பட்ட சிறப்பு சந்தை

Report Print Santhan in ஆசியா
157Shares
157Shares
ibctamil.com

காதலில் தோல்வியடைந்த இளைஞன், காதலர்களுக்காக சிறப்பு சந்தை ஒன்றை வியாட்நாமில் தொடங்கியுள்ளார்.

வியாட்நாம்மைச் சேர்ந்தவர் Dinh Thang. 29 வயதான இவர், சமீபத்தில் காதல் தோல்வியின் காரணமாக விரக்தியின் உச்சிக்கு சென்றுள்ளார்.

காதலில் தோற்ற அவர், காதலித்த போது வாங்கிய பொருட்களை பார்த்தபடியே இருந்துள்ளார்.

அதன் பின் ஹனோய் என்னும் இடத்தில், சந்தை ஒன்றை துவங்கிய அவர், காதல் தோல்வி அடைந்தவர்கள் தாங்கள் இழந்த காதலின் நினைவுப் பொருட்களை இங்கு விற்கலாம் என்று கூறி முன்னாள் காதலர்களின் மார்க்கெட் என்று பெயரிட்டுள்ளார்.

இங்கு காதலில் தோற்றவர்கள் வந்து தங்களிடம் உள்ள நினைவுப் பொருட்களை விற்றுச் செல்கின்றனர்.

சிலர் அவற்றை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். காதல் கடிதங்கள், கைக்குட்டைகள், வாழ்த்து அட்டைகள், வாசனைத் திரவியங்கள், துணிமணிகள், டைரிகள் என்று பல பொருட்கள் இங்கே குவிகின்றன.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்