20 மணிநேரம் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய இளைஞருக்கு நேர்ந்த கதி

Report Print Kabilan in ஆசியா
225Shares
225Shares
ibctamil.com

சீனாவில் தொடர்ந்து 20 மணிநேரம் ‘Video game' விளையாடிய இளைஞர் சுயநினைவின்றி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள ‘Browsing center'-யில், கடந்த மாதம் 27ஆம் திகதி இளைஞர் ஒருவர் Video game விளையாட சென்றுள்ளார்.

மாலையில் நுழைந்த அந்த இளைஞர், மறுநாள் மதியம் வரை உணவு, நீர் எதையும் எடுத்துக் கொள்ளாமல் game விளையாடியுள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞர் தான் அமர்ந்த இருக்கையிலேயே சுயநினைவின்றி மயங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து Ambulance-ன் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், அவர் கோமா நிலைக்கு சென்றது தெரியவந்தது.

Game விளையாடுவதற்கு இடையே, குறித்த இளைஞர் கழிவறைக்கு மட்டுமே சென்று வந்ததாக Browsing center-யில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

போதைப் பொருள் ஏதும் உட்கொண்டாரா என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்