மனைவியை சுட்டு கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட அமைச்சர்

Report Print Kabilan in ஆசியா
72Shares
72Shares
ibctamil.com

பாகிஸ்தானில் அமைச்சர் ஒருவர் தனது இரண்டாவது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் திட்டச் செயல்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் மிர் கஜார்கான் பிஜரானி.

இவர் தனது இரண்டாவது மனைவியான பரீஹா ரசாக் ஹாரூனுடன், கராச்சி நகரில் உள்ள ஆடம்பர பங்களாவில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மதியம், அந்த பங்களாவிலுள்ள ஒரு அறையில், பிஜரானியும், அவரது மனைவியும் சோபா மீது ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பிரேத பரிசோதனை முடிவில், பிஜரானியின் தலையில் ஒரு தோட்டாவும், அவரது மனைவி பரீஹாவின் அடி வயிற்றில் 2 தோட்டாக்களும், தலையில் ஒரு தோட்டாவும் பாய்ந்திருந்தது தெரிய வந்தது.

எனவே, பிஜரானி முதலில் தனது மனைவியை சுட்டுக்கொன்று விட்டு, அதன் பின்னர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த பங்களாவின் சிசிடிவி காமெரா பதிவுகளை கைப்பற்றிய பொலிசார், அதனை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், பங்களாவில் வேலை பார்த்து வந்த 6 பேரிடமும் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்