7 வயது சிறுமி பலாத்கார கொலை வழக்கில் இளைஞர் மீதான குற்றச்சாட்டு உறுதி

Report Print Kabilan in ஆசியா

பாகிஸ்தானில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இளைஞர் மீதான குற்றச்சாட்டை அந்நாட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

பாகிஸ்தானின் கசூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 5ஆம் திகதி மாயமான ஜைனப் அன்சாரி எனும் ஏழு வயது சிறுமி, நான்கு நாட்கள் கழித்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அந்தச் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

இச்சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கண்டனங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 23ஆம் திகதி, கைது செய்யப்பட்ட இம்ரான் அலி நஷுபந்தி எனும் இளைஞர், விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

எனினும், அவரது தகவலை உறுதி செய்வதற்காக, இளைஞரின் மரபணு மாதிரியை பொலிசார் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த, இந்த வழக்கு விசாரணையின் முடிவில், இம்ரான் அலி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்