மியான்மரின் புதிய ஜனாதிபதி தெரிவு

Report Print Kabilan in ஆசியா

மியான்மர் நாட்டின் ஜனாதிபதி டின் கியாவ் உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகியதைத் தொடர்ந்து, வின் மையிண்ட் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மியான்மர் நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதனை எதிர்த்து, தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி சுதந்திர போராட்டத்தை வழி நடத்தினார்.

அதன் காரணமாக, சுமார் 21 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட அவர், மக்களின் போராட்டம் காரணமாக, கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.

இதில் சூகியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால், அவரின் மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் சூகியால் பதவியேற்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து, சூகிக்கு நெருக்கமான டின் கியாவ்(71) ஜனாதிபதியாக பதவியேற்றார். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக அவர் பதவி விலகியதால், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில், ஆங் சான் சூகியின் கட்சியைச் சேர்ந்த வின் மையிண்ட் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ஆங் சான் சூகி, நாட்டின் தலைமை ஆலோசகராக பதவி வகித்து வருகிறார்.

Hein Htet/EPA-EFE

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்