விமானத்தின் அவசர கால கதவை திறந்த பயணி: சுதாரித்த விமானியால் அசம்பாவிதம் தவிர்ப்பு

Report Print Kabilan in ஆசியா

சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து விமானம் ஒன்று புறப்படும் சமயத்தில், பயணி ஒருவர் அவசர கால கதவுகளை திறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ஜிங்கில் இருந்து விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அப்போது Chen என்ற நபர் விமானத்தின் அவசர கதவுகளை திறந்துள்ளார். மேலும், அவசர வாயில் வழியாக வெளியே செல்ல அவர் முயற்சி செய்தும் இருக்கிறார்.

இதனைக் கண்ட விமான பணிப்பெண்கள் அதிர்ச்சியடைந்து, விமான அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், விமானிக்கும் இந்த தகவல் தெரிய வர விமானம் நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து Chen-ஐ விசாரித்தபோது அவர் கூறுகையில், விமானத்திற்குள் சூடாக இருந்ததாகவும், வியர்த்ததால் காற்று வர வேண்டும் என்று ஜன்னலை திறப்பதாக நினைத்து, அவசர கதவுகளை திறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், அவர் மீது பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், விமான பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

சென்னிற்கு 15 நாள் சிறை தண்டனை மற்றும் 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. Chen-யின் இந்த செயலால் மூன்றுக்கும் அதிகமான விமானங்கள் புறப்பட தாமதம் ஆகியதாக கூறப்படுகிறது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers