கிணற்றில் தவறி விழுந்த நிறைமாத கர்ப்பிணி பெண்: காப்பாற்றப்பட்ட திக் திக் நிமிடங்கள்

Report Print Vijay Amburore in ஆசியா

சீனாவில் சிறிய கிணற்றுக்குள் தவறி விழுந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணை, பொலிஸார் போராடி மீட்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

கிழக்கு சீனாவின் Anhui மாகாணத்தில் 8 மாத நிறை கர்ப்பிணி பெண் ஒருவர், கிணற்றில் தவறி விழுந்துவிட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்த சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், மீட்பு பணியில் ஈடுபட ஆரம்பித்தனர்.

6.5 ஆழமும், 31 இன்ச் அகலமும் கொண்ட சிறிய கிணற்றுக்குள் அவர் எப்படி தவறி விழுந்தார் என்பது குறித்து சீன ஊடங்கங்கள் எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை.

Zhang என்ற அதிகாரி தன்னுடைய இடுப்பு மற்றும் கால் பகுதியில் கயிற்றை கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கினார். உள்ளே கர்ப்பிணி பெண்ணின் கையை அவர் இறுக்கமாக பிடித்துக்கொள்ள, வெளியில் இருந்தவர்கள் மெதுவாக அதிகாரியை மேலே இழுக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் காப்பாற்றப்பட்ட கர்ப்பிணி பெண் உடனே மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு, தற்போது நல்ல நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers