எங்கள் இருவரையும் ஒன்றாக புதைத்து விடுங்கள்: காதலியின் தலையை துண்டித்து காதலன் எழுதிய கடிதம்

Report Print Vijay Amburore in ஆசியா

கசகஸ்தான் நாட்டில் திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலின் தலையை துண்டித்து விட்டு காதலனும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கசகஸ்தான் நாட்டை சேர்ந்த Shyngys Bekenov (26) என்பவர் உயர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட இளம் ஆசிரியர் ஆவர்.

இவர் சமீபத்தில் மருத்துவ பட்டம் பெற்ற இளம் பெண்மருத்துவரான Nazerke Bekzhanova (21)-விடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் இதற்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் Nazerke, Bekenov-வின் காதலை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த Bekenov, கத்தியை கொண்டு தன்னுடைய காதலியின் தலையை துண்டித்துள்ளார்.

பின்னர் தானும் வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் இதனை பார்த்த சிலர் ஆசிரியரை பலத்த காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்

இதற்கிடையில் சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். Nazerke-வின் உடலை Tasboget கிராமம் அருகே கண்டுபிடித்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில், 'எங்கள் இருவரையும் ஒன்றாக புதைத்து விடுங்கள்' என Bekenov எழுதி வைத்திருந்த கடிதமும் சிக்கியது.

விசாரணையில் Nazerke திருமணத்திற்கு சம்மதித்தாலும், குடும்பத்திற்கு பயந்தே அவர் வேண்டாம் என கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்