பிரான்ஸ் குடிமகனுக்கு மரண தண்டனை விதித்தது இந்தோனேஷியா நீதிமன்றம்: குற்றம் நடந்தது இது தான்

Report Print Basu in ஆசியா

பிரான்ஸ் குடிமகன் ஒருவருக்கு இந்தோனேஷியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 35 வயதான ஃபெலிக்ஸ் டார்பின் என்பவர், போதை மருந்து கடத்திய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம், பாலி தீவுக்கு அருகே உள்ள லாபாக விமான நிலையத்தில் வைத்து ஃபெலிக்ஸ் கைது செய்யப்பட்டார். அவர் கொண்டு வந்த கைப்பெட்டியில் 3 கிலோ போதை மருந்து வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

உலகிலே போதை மருந்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்ட நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று. இங்கு வெளிநாட்டவர்கள் உட்பட போதை மருந்து கடத்துபவர்களுக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றுவது உட்பட மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஃபெலிக்ஸ் வழக்கை விசாரித்த நீதிபதி இசுருரு சம்சுல் ஆரிப் நீதிமன்றத்தில் கூறியதாவது, ஃபெலிக்ஸ் சட்டப்படி போதை மருந்துகளை இறக்குமதி செய்யும் குற்றவாளியாக கண்டறியப்பட்ட நிலையில் அவருக்கு மரண தண்டனை வழங்குவதாக தீர்ப்பளித்தார்.

சர்வதேச போதைமருந்து கடத்தல் கும்பலுடன் ஃபெலிக்ஸிக்கு தொடர்புள்ளது என அவர் கடத்தி வந்த போதை மருந்துகளின் மூலம் தெரியவந்துள்ளது. பிரதிவாதியின் செயல்கள் இளைய தலைமுறையினருக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் நீதிபதி ஆரிப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்