பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை... டிரம்புக்கு ஈரான் ஜனாதிபதி பதிலடி

Report Print Basu in ஆசியா

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என டிரம்ப் கூறியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி பேட்டியளித்துள்ளார்.

முன்னதாக, பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்பட முயற்சி மேற்கொண்டால், ஈரான் பெரிய படையை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, வெள்ளை மாளிகையிலிருந்து புறப்பட்ட டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஈரான் எப்போது தயாராக இருக்கிறார்களோ, அப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார் என டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில் டிரம்பின் பேச்சுவார்த்தை குறித்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் ஜனாதிபதி பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து ஈரான் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், பேச்சுவார்த்தைக்கு எப்போதும் ஆதரவு அளிப்பவன் நான், ஆனால், இன்றைய சூழ்நிலை பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்றது அல்ல, எதிர்ப்பு என்பது நமது ஒரே தேர்வு என ஈரான் ஜனாதிபி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்