இனி இப்படி செய்யக்கூடாது..! நகைச்சுவையாக ரஷ்ய தலைவர் புதினை எச்சரித்த டிரம்ப்

Report Print Basu in ஆசியா

ஜி 20 மாநட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ரஷ்யா ஜனாதிபதி புதின் உடனான சந்திப்பின் போது அவரை சிரித்தபடி எச்சரித்துள்ளார்.

அர்ஜென்டீனா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிக்கோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய 20 நாடுகள் பங்கேற்கும் ஜி 20 மாநட்டு ஐப்பான், ஒசாகாவில் இடம்பெற்றது.

இதன் போது ரஷ்யா ஜனாதிபதி புதின், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை குறித்த டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது, புதினுடனான சந்திப்பு பெரிய மாரியாதை நிமித்தமான சந்திப்பு. இதன் போது, வர்த்தகம் மற்றும் சில ஆயுதக் குறைப்பு உள்ளிட்ட பல விஷயங்களை நாங்கள் விவாதித்தோம் என கூறினார்.

2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றிப்பெற ரஷ்யா உதவியதாக சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையிட இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட விவகாரம் பற்றி பேசினீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், கண்டிப்பாக விவாதித்தோம்.

ஒசாகாவில் புதின் உடனான சந்திப்பின் போது, ரஷ்ய தலைவரை நோக்கி தனது விரலை ஆட்டிய டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட வேண்டாம் என புன்னகையுடன் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்