ஜி-20 மாநாட்டில் ஸ்பெயின் பிரதமரை அவமானப்படுத்திய டிரம்ப்: இணையத்தில் பரவும் வீடியோ

Report Print Basu in ஆசியா

ஜப்பான் , ஒசாகாவில் இடம்பெற்ற ஜி-20 மாநாட்டில் ஸ்பெயின் பிரதமரை, அமெரிக்க ஜனாதிபதி அவமானப்படுத்தியதாக ஸ்பெயின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது.

தனது அரசியில் எதிரிகளை நேரடியாகவும், சமூக வலைதளம் மூலமாகவும் தாக்கி பேசி தலைப்பு செய்தி வருவதில் பெயர் பெற்றவர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். தற்போது, அவர் ஸ்பெயின் ஊடகங்களின் கோபத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்டுள்ளார்.

ஜப்பானின் ஒசாகாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு அமர்வில், டிரம்ப் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸை அவமானப்படுத்தும் வகையில் செயல்பட்டதாக ஸ்பெயின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த மாநாட்டில், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ தனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு அருகே நின்றுக்கொண்டிருந்த போது, அவருக்கு பின்புறம் வந்த டிரம்ப், அவரை அழைத்து இருக்கையில் அமருமாறு கூறிவிட்டு செல்கிறார். எனினும், பெட்ரோ சிரித்தபடி இருக்கையில் அமர்ந்துள்ளார்.

டிரம்பின் இச்செயல் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக ஸ்பெயின் ஊடகங்கள் விமர்சித்து வருகிறது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்