உலக தலைவர்களுடன் இவான்கா டிரம்ப் செய்த செயல்.. விமர்சிக்கப்படும் வீடியோ

Report Print Basu in ஆசியா

ஜப்பானில் நடந்த ஜி-20 மாநாட்டின் போது டிரம்பின் முதல் மகள் இவான்கா டிரம்ப், உலக தலைவர்களுடன் சமமாக கலந்துரையாடியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஜி-20 மாநாட்டில் அமெரிக்க தூதரக கலந்துக்கொண்ட இவான்கா டிரம்ப், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச நாணய நிதிய இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட் மற்றும் பிரித்தானியா பிரதமர் தெரசா மே ஆகியோருக்கு இடையிலான உரையாடலின் போது, இடையில் பேசி குறுக்கிட்ட இவான்கா, உலக தலைவர்களுடனான உரையாடலில் இணைய முயற்சி செய்தார்.

குறித்த நிகழ்வின் வீடியோவை பிரான்ஸ் அரசாங்கம் வெளியிட்டுள்ளாது. இவான்கா வீடியோ இணையத்தில் வைரலாக பலர் அவரின் இச்செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இவான்காவின் அத்தகைய நடத்தை தங்கள தூதரக நிலைப்பாட்டை காயப்படுத்துகிறது என அமெரிக்காவின் நியூ யார்க் ஜனநாயக கட்சியை சேர்ந்த அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் விமர்சித்துள்ளார்.

மேலும், இது பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் உள்ளது, ஆனால் ஒருவரின் மகளாக இருப்பது உண்மையில் தொழில் தகுதி அல்ல.அமெரிக்காவிற்கு ஜி 20 வேலை செய்யும் ஜனாதிபதி தேவை. தகுதிவாய்ந்த தூதரை கொண்டுவந்தால் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்