8 லட்ச மக்கள் வெளியேற்றம்.. தனி தீவாக மாறிய ஜப்பான் நகரம்: தொடரும் எச்சரிக்கை

Report Print Basu in ஆசியா

ஜப்பானில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக ஒரு நகரமே காலி செய்யப்பட்டுள்ளது.

மழை காற்று காரணமாக நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ககோஷிமா மாகாணத்தில் உள்ள மூன்று நகரங்களில் வசிக்கும் 8 லட்ச மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அந்நகரைச் சுற்றியுள்ள பகுதியில் சமீபத்திய நாட்களில் அசாதாரண அளவிலான மழை பெய்துள்ளது. ககோஷிமாவில் 275,287 வீடுகளில் 594,943 குடியிருப்பாளர்கள் உள்ளனர்.

கடும் மழையால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், ககோஷிமா மாகாண நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அனைவரும், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாத இறுதியில் இருந்து நாட்டின் தெற்கே உள்ள பிரதான தீவான கியுஷுவில் சுமார் 900 மிமீ (35 அங்குல) மழை பெய்துள்ளதாக மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கனமழை தொடரும் என வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த யூலை மாதம் நாட்டின் மேற்கு பகுதியில் மோசமான காலநிலையால் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...