இந்தோனேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Report Print Basu in ஆசியா

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவில் 7.2 என்ற அளவுக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் உணரப்பட்டுள்ளது. வடக்கு மலுகு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கிழக்குப் பகுதியில் - வடக்கு மாலுக்கின் மிகப்பெரிய தீவான ஹல்மஹேராவில் உள்ள டெர்னேட் நகரில் இந்த மையப்பகுதி பதிவு செய்யப்பட்டது. பூகம்பம் மேற்பரப்பில் 10 கி.மீ கீழே தாக்கியதாக கருதப்படுகிறது. நிலநடுக்கம் மேற்பரப்புக்கு நெருக்கமாக இருப்பதால் அதன் தாக்கம் அதிகமாக உணரப்படும்.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் அல்லது பாதிப்புகள் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை இல்லை.இந்தோனேசிய அதிகாரிகள் காலை 9.41 மணிக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்தனர், பின்னர் ஒரு சக்திவாய்ந்த சுனாமி கடற்கரையைத் தாக்க வாய்ப்பில்லை என்று பரிந்துரைத்தது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி கிட்டத்தட்ட தீவின் கடற்கரையில் அமைந்திருப்பதால், சுனாமி நிலத்தைத் தாக்கும் வாய்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers