தென் கொரியாவில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய-சீனா போர் விமானங்களுக்கு நேர்ந்த கதி

Report Print Basu in ஆசியா

தென் கொரியா வான்வழியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானத்தை, அந்நாட்டு ஜெட் விமானங்கள் 100ற்கும் மேற்பட்ட ரவுண்ட்ஸ் எச்சரிக்கை தாக்குதல் நடத்தி விரட்டியதாக தென் கொரியா தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியா இராணுவம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஒரு ரஷ்ய போர் விமானம், இரண்டு சீனா போர் விமானம் என மூன்று விமானங்கள் கொரியா விமான பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் நுழைந்தது. தொடர்ந்து தென் கொரியாவின் டோக்டோ வான்வெளியில் ரஷ்யாவின் ஏ-50 ரக விமானம் அத்துமீறி நுழைந்தது.

டோக்டோ, தென் கொரியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஒரு தீவு, இது ஜப்பானாலும் உரிமை கோரப்பட்டது, ஜப்பானில் இத்தீவை தாகேஷிமா என்று அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, தென் கொரிய இராணுவத்திற்கு சொந்தமான எஃப்-15 மற்றும் எஃப்-16 ரக ஜெட் விமானங்கள், எச்சரிக்கை விடுக்கும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தி நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து தென் கொரிய வான்வெளியை விட்டு ரஷ்ய விமானம் வெளியேறியது.

எனினும், சுமார் 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் தென் கொரியாவிற்குள் நுழைந்துள்ளது,தென் கொரியர்கள் மீண்டும் எச்சரிக்கை தாக்குதல் நடத்தி விரட்டினர். இதன்போது, தென் கொரியாவின் எஃப்-15 மற்றும் எஃப்-16 ரக ஜெட் விமானங்கள், 360 ரவுண்ட்ஸ் எச்சரிக்கை விடுக்கும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

சீனா மற்றும் ரஷ்யாவின் வான்வழி மீறல்கள் குறித்து தென் கொரிய அரசாங்கம் உத்தியோகபூர்வ புகார்களை அளிக்கும் என்றும் தென் கொரியா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துமீறில் குறித்து ரஷ்ய அல்லது சீன அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்