கிம் ஜாங்-உன் கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்யர்களுக்கு நேர்ந்த கதி

Report Print Basu in ஆசியா

கிம் ஜாங்-உன் கோட்டையாக திகழும் வட கொரியாவிற்குள் அத்துமீறி நுழைந்த 15 ரஷ்யர்கள் மற்றும் 2 தென் கொரியர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்

இச்செய்தியை வட கொரியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் உறுதி செய்துள்ளது. மீன் பிடி படகில் பயணித்து வந்த 17 பேர் அடங்கிய குழு வட கொரியாவின் நுழைவு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள 17 பேரும் வொன்சன் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த வந்த கப்பல் ரஷ்யாவின் நெவெல்ஸ்கில் இருக்கும் வடகிழக்கு மீன்வள நிறுவனத்திற்கு சொந்தமான சியாங்கைலின் -8 என தூதரகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கப்பலும் வொன்சனில் உள்ளது என ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

இரண்டு தென் கொரிய கப்பலோட்டிகளும் பாதுகாப்பாக இருப்பதாக கூறிய தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம், அவர்களது குடும்பங்கள், வட கொரியா மற்றும் ரஷ்யாவுடன் கலந்தாலோசிப்பதன் மூலம் அவர்களின் சுதந்திரத்தைப் பெற முயற்சிப்பதாக கூறினார்.

17 பேரையும் நேரில் சென்ற கண்ட ரஷ்ய அதிகாரிகள், அனைவரும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், இப்பிரச்சனையை தீர்க்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும், வட கொரிய அரசாங்கத்துடன் நிலையான தொடர்பில் இருப்பதாக ரஷ்ய தூதரகம் தெவித்துள்ளது.

ரஷ்யா, வட கொரியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறது, மேலும், தொடர்ந்து ஒரு வழக்கமான வர்த்தக நண்பராக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. தென் கொரியா தனது வடக்கு அண்டை நாடுகளுடனான பதட்டங்களைத் தணிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, ஆனால், தென் கொரியர்கள் அனுமதியின்றி வட கொரியாவுக்குச் செல்வதை அந்நாட்டு அரசாங்கம் தடைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்