இந்தியாவுக்கு எதிராக அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை எடுக்கும் பாகிஸ்தான்: எல்லையில் பதற்றம்

Report Print Basu in ஆசியா

நிரந்தரமாக ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கியுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான அனைத்த ராஜாங்க உறவுகளையும் நிறுத்துவதென முடிவு செய்துள்ளது. இந்தியாவுடன் இனி எந்த வர்த்தக உறவும் கிடையாது, இந்தியா பாகிஸ்தானில் உள்ள வர்த்தகர்கள் இனி வர்த்தம் மேற்கொள்ள முடியாது, இத்தோடு வாகா எல்லையையும் மூடுவதாக அறிவித்தது. இத்துடன் பாகிஸ்தான் இந்தியா இடையேயான அனைத்து உறவுகளும் முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில்,இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பாகிஸ்தானின் லாகூரில் இருந்து திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும் இயக்கப்பட்டு வரும் சம்ஜௌதா விரைவு ரயில் சேவையை பாகிஸ்தான் திடீரென நிறுத்தியுள்ளது.

சம்ஜௌதா ரயில், இந்தியப் பகுதியில் டெல்லியில் இருந்து அட்டாரி வரையிலும், பாகிஸ்தான் பகுதியில் வாகாவில் இருந்து லாகூர் வரையிலும் இயக்கப்படுகிறது. இன்று வாகா எல்லையில் சம்ஜௌதா விரைவு ரயிலை பாகிஸ்தான் திடீரென நிறுத்தியதால் பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்தியாவுடனான ராஜாங்க உறவுகளை நிறுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்திய பின்னர் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்ஜெளதா விரைவு ரயில் சேவையை பாகிஸ்தான் கடந்த மார்ச் மாதம் மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பாகிஸ்தான் திரையரங்குகளில் எந்த இந்திய திரைப்படமும் திரையிடப்படாது என்று பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் டாக்டர் ஃபிர்தஸ் ஆஷிக் அவான் கூறுயுள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்