அதிகரிக்கும் பதற்றம்..! எல்லையில் போர் விமானங்களை குவிக்கும் பாகிஸ்தான்: தீவிரத்தில் இந்தியா

Report Print Basu in ஆசியா

இந்தியாவின் லடாக் எல்லைக்கு அருகே உள்ள ராணுவ தளத்தில் பாகிஸ்தான் போர் விமானங்களை குவித்து வருவது இருநாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகாரித்துள்ளது.

சமீபத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை இந்திய அரசாங்கம் நீக்கியது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காஷ்மீரியர்களுக்கு முழு ஆதரவு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பல நடவடிக்கையை முன்னெடுத்தது.

இந்நிலையில், இந்தியாவின் லடாக் எல்லைக்கு அருகே உள்ள skardu பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.

பாகிஸ்தனின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அதிகாரிகள், பாகிஸ்தனை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ராணுவ பயிற்சி மேற்கொள்ள skardu பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை பாகிஸ்தான் குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்