பாகிஸ்தானுக்கு பதிலடி..! இந்தியா எடுத்த அதிரடி முடிவு

Report Print Basu in ஆசியா

பாகிஸ்தானை தொடர்ந்து டெல்லி-லாகூர் பேருந்து சேவையை இந்தியா அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது.

லாகூர்-டெல்லி இடையேயான தோஸ்தி பேருந்து சேவையை பாகிஸ்தான் நிறுத்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தியாவும் திங்களன்று அதிகாரப்பூர்வமாக போருந்து சேவையை காலவரையின்றி நிறுத்தியது.

டெல்லி - லாகூர் பேருந்து சேவையை நிறுத்திவைக்கும் பாகிஸ்தான் முடிவின் விளைவாக, 12ம் தேதி இன்று முதல் DTC-யால் பேருந்துகளை இயக்க முடியாது என்று டெல்லி போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய தனது அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான இந்தியாவின் முடிவுக்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்தது.

பேருந்து சேவையை நிறுத்துவதற்கு முன்பு, இந்தியாவுடனான சம்ஜெளதா விரைவு ரயில் சேவையை நிரந்தரமாக நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது. லாகூர்-அத்தாரி இடையேயான சம்ஜெளதா விரைவு ரயில் வாரத்திற்கு இரண்டு முறை இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்