மலேசியாவில் மாயமான பிரித்தானியா சிறுமி வழக்கில் அதிர்ச்சி செய்தி: துயரத்தில் நொறுங்கிய பெற்றோர்

Report Print Basu in ஆசியா

மலேசியாவில் மாயமான பிரித்தானியா சிறுமி பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

மலேசியாவிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற பிரித்தானியாவை சேர்ந்த 15 வயது நோரா என்ற சிறுமி, கடந்த 4ஆம் திகதி, தலைநகர் கோலாலம்பூர் டுசன் பகுதியில் தங்கியிருந்த ஹொட்டல் அறையிலிருந்து மாயமானார். நோரா சற்று மூளை வளர்ச்சிக் குறைபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாயமான சிறுமியை கண்டுபிடிக்கும் பணியில் மலேசியா அதிகாரிகளுக்கு உதவியாக அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் பிரத்தானியா அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

10 நாட்களாக பொலிசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று ஆகத்து 13ம் திகதி, அவர் தங்கியிருந்த ஹொட்டல் இருந்து 2 கி.மி தொலைவில் உள்ள காட்டின் நீர்வீழ்ச்சிக்கு அருகே நோரா போன்ற பெண்ணின் உடல் கண்பிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மலேசியா தலைமை பொலிஸ் அதிகாரி முகமது யூசப் அளித்த பேட்டியில். நாங்கள் வெள்ளை தோல் கொண்ட பெண் உடலை கண்டுபிடித்து உள்ளோம். இன்று நீர்வீழ்ச்சிக்கு அருகே உடலை கண்ட நபர் போன் மூலம் பொலிசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்தனர். உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அப்படியே இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

சம்பவயிடத்திற்கு நோராவின் பெற்றோர்கள் மற்றும் இரண்டு தடயவியல் வாகனங்கள் விரைந்துள்ளன. காட்டுப்பகுதியில் கிடைத்த உடல் நோராவுடையது என பொலிஸ் தரப்பில் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் யாருடைது என்பதை கண்டறியும் பணி நடைபெற்று வருவதால் பொலிசார் தரப்பில் தற்போது வரை உடல் யாருடைது என்ற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. நோரா குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10,000 பவுண்ட் சன்மானம் வழங்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers