இந்தியாவிற்கு 10 மடங்கு பதிலடி கிடைக்கும்... மோடியை சரமாரியாக விமர்சித்த இம்ரான் கான்

Report Print Vijay Amburore in ஆசியா

ஆசாத் மற்றும் ஜம்மு-காஷ்மீர் (ஏ.ஜே.கே) ஆகியவற்றைத் தாக்க முயன்றால் இந்தியாவுக்கு வலுவான பதில் கிடைக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 14 அன்று காஷ்மீர் ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட-காஷ்மீர் சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் பரம எதிரியான இந்தியாவுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இன்று முசாபரபாத்தில் உள்ள சட்டமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையாற்றியுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் மோடி தனது கடைசி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார். அதற்கு அவர் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். முழு தேசமும் பாகிஸ்தான் இராணுவமும் அதற்கு தயாராக உள்ளன.

இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சிக்கு நீதிபதிகள் அஞ்சுகின்றனர். ஊடகங்களை அவர்கள் கட்டுப்படுத்தி கடந்த 11 நாட்களாக காஷ்மீரில் நடப்பதை வெளியில் தெரியாமல் வைத்துள்ளனர்.

முழு உலகமும் காஷ்மீர் மக்களைப் பற்றி கவலைப்படுவதோடு, சர்ச்சையின் தீர்வை நோக்கியும் உள்ளது.

ஒரு நாடு ஒரு போரினால் அழிக்கப்படுவதில்லை, அதற்கு பதிலாக ஒரு சித்தாந்தத்தை ஒழிப்பதன் மூலம் தான் அழிக்கப்படுகிறது.

இந்த தீவிரவாத சித்தாந்தத்தால் தான் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இது இந்தியாவில் ஆணி வேராக பதிந்துள்ளது.

முஸ்லிம்களுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரான வெறுப்பை வளர்க்கும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் ஹிட்லரிடமிருந்து ஈர்க்கப்பட்டு மோடி அதில் உறுப்பினராக இருக்கிறார். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்தியாவிற்கும் எங்களுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை. ஆனால் இந்த சித்தாந்தத்திற்கு எதிராக தான் நாங்கள் நிற்கிறோம்.

பாகிஸ்தான் ஒரு சித்தாந்தத்தின் (இரண்டு தேச கோட்பாட்டின்) அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்தியாவில் முஸ்லிம்கள் அச்ச நிலையில் வாழ்கின்றனர். இன்று காஷ்மீர் மக்கள் கடுமையான சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சர்ச்சைக்குரிய பயங்கரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மோடி ஒதுக்கித் தள்ளியுள்ளதால், பாகிஸ்தான் இந்த விஷயத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு (ஐ.சி.ஜே) எடுத்துச் செல்லும்.

"நான் நரேந்திர மோடிக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்திய ராணுவம் கலகம் மூட்ட நினைத்தால் அதற்கு நாங்கள் பத்து மடங்கு பதிலடி கொடுப்போம்" என பேசியுள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers