வட கொரியா உருவாக்கும் போராயுதம்... முக்கிய ரகசிய தகவல்களை வெளியிட்டது ஜப்பான்

Report Print Basu in ஆசியா

ஜப்பானைக் காக்கும் ஏவுகணை கவசத்தை ஊடுருவுவதற்காக வட கொரியா போராயுதத்தை உருவாக்கி வருவதாகத் தெரிகிறது என நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

செவ்வாயன்று வட கொரியாவால் ஏவப்பட்ட சமீபத்திய ஏவுகணைகளின் ஒழுங்கற்ற பாதைகளை சுட்டிக்காட்டிய ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தாகேஷி இவயா இவ்வாறு கூறினார்.

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகள் அண்டை நாடான ஜப்பானில் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளன, ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஏவுகணைகள் முக்கியமற்றது என்று நிராகரித்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தாகேஷி இவயா கூறியதாவது, சமீபத்தில் வட கொரியா ஏவிய ராக்கெட்டுகள் புதிய குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை என்று ஜப்பான் நம்புகிறது

ஜப்பானுடன் ராணுவ புலனாய்வுப் பகிர்வு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக சியோல் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு வட கொரியா ஏவுகணை சோதனைகள் மேற்கொண்டுள்ளது.

வட கொரியா அச்சுறுத்தல் அதிகரிக்கும் போது சியோலின் முடிவை பகுத்தறிவற்றது என்று ஐவயா மற்றும் பிற ஜப்பானிய அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.

ஜப்பானும் அமெரிக்காவும் ஜப்பான் கடலில் Aegis பாதுகாப்பு போர் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளன. அவை விண்வெளியிலிருந்து தாக்கும் ஆயுதங்களை அழிக்க வடிவமைக்கப்பட்ட இடைமறிப்பு ஏவுகணைகளைக் கொண்டுள்ளன.

ஜப்பான் தனது பாலிஸ்டிக் ஏவுகணை கவசத்தை உயர்த்துவதற்காக நிலத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டு Aegis பேட்டரிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்