இலங்கை வீரர்களை மிரட்டி பணிய வைத்தது இந்தியா: பாகிஸ்தான் திடுக் தகவல்

Report Print Basu in ஆசியா

இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுப்பு தெரிவித்ததற்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் அமைச்சர் Chaudhary Fawad Hussain-னே இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக, இலங்கையின் டி-20 அணித்தலைவர் லசித் மலிங்கா, மேத்யூஸ் உட்பட 10 வீரர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர்.

எனினும், இது இலங்கையின் விஷயம் அதில் பாகிஸ்தான் தலையிடாது, ஆனால், திட்டமிட்ட படி போட்டியை நடத்த பாகிஸ்தான் ஏற்பாடு செய்து வருகிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

இந்நிலையில், பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் Chaudhary Fawad Hussain, இந்தியா தான் இலங்கை வீரர்களை மிரட்டி பணிய வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து Chaudhary Fawad Hussain ட்விட்டரில் பதிவிட்டதாவது, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு மறுப்பு தெரிவிக்காவிட்டால் ஐ.பி.எல்-ல் இருந்து வெளியேற்றப் படுவீர்கள் என்று இந்தியா இலங்கை வீரர்களை அச்சுறுத்தியதாக விளையாட்டு வர்ணனையாளர்கள் என்னிடம் சொன்னார்கள்.

இது மிகவும் மலிவான சூழ்ச்சி, விளையாட்டிலிருந்து விண்வெளி வரை இந்தியா தான் சிறந்தது என்ற தீவிர நம்பிக்கை என்பது நாம் கண்டிக்க வேண்டிய ஒன்று, இந்தியா விளையாட்டு அதிகாரிகள் மலிவானவர்களாக இருக்கின்றார்கள் என விமர்சித்துள்ளார்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...