காபூலில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்... ஜனாதிபதிக்கு வைத்த குறியில் சிக்கி 30 பேர் உடல் சிதறி பலி

Report Print Basu in ஆசியா

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் இன்று ஒரே நாளில் இரண்டு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களை நிலை குலைய செய்துள்ளது.

காபூலுக்கு வடக்கே Parwan மாகாணத்தின் தலைநகர் Charikar-ல் ஜனாதிபதி Ashraf Ghani-யின் தேர்தல் பேரணியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர், 30 பேர் காயமடைந்தனர்.

இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டுடன் நுழைந்த மர்ம நபர் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Charikar-ல் தாக்குதல் நடந்த சிறிது நேரத்திற்குப் பிறகு, அமெரிக்க தூதரகம் மற்றும் அரசாங்க கட்டிடங்கள் அமைந்துள்ள காபூலின் பெரிதும் பாதுகாக்கப்பட்ட பகுதியான the Massoud Square அருகே மற்றொரு குண்டுவெடிப்பு அரங்கேறியது.

இந்த தற்கொலை தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டிடமும் பாதிக்கப்பட்டுள்ளது. the Massoud Square தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் இரண்டு குண்டுவெடிப்பு மூலம் காபூலை கதிகலங்க வைத்ததற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்திய வெடிகுண்டுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Ashraf Ghani இரண்டாவது முறை ஜனாதிபதியாக போட்டி போடும் நிலையில், செப்டம்பர் 28ம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க, ஆப்கானிஸ்தான் மற்றும் வெளிநாட்டுப் படைகளுடன் மோதல்களை தீவிரப்படுத்துவதாக தலிபான் தளபதிகள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்